Skip links

TISL launches election monitoring on the use of public resources for campaign purposes and campaign financing

– Begins election monitoring in all 25 districts

– Invites the public to be vigilant and report the use of public resources for election campaign purposes, and election campaign expenses to TISL

– Launches hotlines and website Apesalli.lk to report incidents

Transparency International Sri Lanka today commenced its election monitoring programme, which will deploy election observers across the country to monitor the use of public resources for campaign purposes and campaign finance during the upcoming Local Government Election scheduled to take place on the 9th of March 2023. As it has done since 2005, TISL has deployed 25 District Electoral Observers who will work with 160 additional observers working at the electorate level, for this purpose.

TISL announced its hotlines 076 322 344 2 and 076 322 366 2 and urged the public to report instances of the use of public resources for campaign purposes via direct calls or WhatsApp, if they see state owned buildings, vehicles, public officials, or government projects etc. being used for election campaigning purposes. TISL’s website  www.apesalli.lk is also open for public complaints in Sinhala, Tamil, or English, attaching the relevant evidence. Complaints can also be made through the Apesalli mobile application available for downloading at the Play Store and App store. When such a complaint is received, TISL compiles all evidence, verifies the information, and submits it to the Election Commission of Sri Lanka for further action.

Nadishani Perera, Executive Director of TISL stated, “The use of public resources for campaign purposes would constitute an abuse of public resources, amounting to corruption and should be dealt with seriously. We also urge all political parties, candidates, and independent groups to fulfill their legal obligations on reporting and be transparent regarding political campaign financing at the upcoming local government election.”

The purpose of a campaign financing law is to prevent undue influence on parties and candidates by wealthy donors, and to reduce excessive and illegal spending on elections, including by means such as the misuse of public funds and vote-buying. This election will be the first to be held after the enactment of the Regulation of Election Expenditure Act earlier this year. As an organisation committed to the eradication of corruption and the preservation of electoral integrity in Sri Lanka, TISL will observe the effectiveness of this new law.

TISL appeals to all citizens to actively make any credible complaints regarding the use of public resources for campaign purposes to TISL, to ensure that the integrity of the upcoming election is maintained.

 

රාජ්‍ය දේපල මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා භාවිතා කිරීම සහ මැතිවරණ ප්‍රචාරණ වියදම් ඉලක්ක කරමින් TISL ආයතනය සිය මැතිවරණ නිරීක්ෂණ කටයුතු ආරම්භ කරයි

– දිස්ත්‍රික්ක 25ම ආවරණය වන පරිදි මැතිවරණ නිරීක්ෂණ කටයුතු දියත් කරයි.

– රාජ්‍ය දේපල මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා භාවිතා කිරීම සහ මැතිවරණ ප්‍රචාරණ වියදම් පිළිබඳව විමසිලිමත් වන ලෙස සහ එවැනි අවස්ථා වාර්තා කරන ලෙස මහජනතාවට ආරාධනා කරයි.

– සිදුවීම් වාර්තා කිරීම සඳහා මැතිවරණ ක්ෂණික ඇමතුම් අංක සහ Apesalli.lk වෙබ් අඩවිය හඳුන්වා දෙයි.

2023 මාර්තු 9 වන දින පැවැත්වීමට නියමිත පළාත් පාලන මැතිවරණයේදී, රාජ්‍ය දේපල මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා භාවිතා කිරීම සහ මැතිවරණ ප්‍රචාරණ වියදම් නිරීක්ෂණය කිරීම ඉලක්ක කර, රට පුරා මැතිවරණ නිරීක්ෂකයින් යොදවමින් සිය මැතිවරණ නිරීක්ෂණ වැඩසටහන අද දින ආරම්භ කරන බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) පවසයි. 2005 වසරේ සිට සිදු කර ඇති පරිදි, TISL ආයතනය විසින් මේ සඳහා දිස්ත්‍රික් මැතිවරණ නිරීක්ෂකයින් 25  දෙනෙකු යොදවා ඇති අතර ඔවුන් මැතිවරණ කොට්ඨාශ මට්ටමින් කටයුතු කරන අතිරේක නිරීක්ෂකයින් 160 දෙනෙකු සමඟ වැඩ කිරීමට නියමිතය.

TISL ආයතනය මැතිවරණ ක්ෂණික ඇමතුම් අංක 076 322 344 2 සහ 076 322 366 2 නිවේදනය කළ  අතර යම් පාර්ශවයක් විසින් රජය සතු ගොඩනැගිලි, වාහන, රාජ්‍ය නිලධාරීන් හෝ රජයේ ව්‍යාපෘති යනාදිය මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා භාවිතා කරනු ලබන්නේ නම්, එවැනි සිදුවීම් රාජ්‍ය දේපල මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා භාවිතා වන අවස්ථාවක් ලෙස සලකා ඉහත අංක වලට දුරකථන ඇමතුම් හෝ WhatsApp හරහා සිය ආයතනයට වාර්තා කරන ලෙස මහජනතාවගෙන් ඉල්ලා සිටියේය. TISL ආයතනයේ වෙබ් අඩවියක් වන www.apesalli.lk හරහාද  මහජන පැමිණිලි සිංහල, දෙමළ හෝ ඉංග්‍රීසි භාෂාවෙන් සාක්ෂි සහිතව ඉදිරිපත් කළ හැක. මීට අමතරව Play Store සහ App store හි බාගත කිරීම සඳහා ඇති Apesalli ඇප් එක/ජංගම යෙදුම හරහා ද මහජන පැමිණිලි ඉදිරිපත් කළ හැකිය. එවැනි පැමිණිල්ලක් ලැබුණු විට, TISL ආයතනය විසින් සියලුම සාක්ෂි සම්පාදනය කර, තොරතුරු සත්‍යාපනය කර, ඉදිරි ක්‍රියාමාර්ග සඳහා ශ්‍රී ලංකා මැතිවරණ කොමිෂන් සභාව වෙත ඉදිරිපත් කරනු ලැබේ.

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂිකා නදිශානි පෙරේරා මහත්මිය ප්‍රකාශ කළේ, “රාජ්‍ය දේපල මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා යොදා ගැනීම, දූෂණයේ ප්‍රභේදයක් වන  රාජ්‍ය සම්පත් අවභාවිතයක් වන අතර ඒ සම්බන්ධයෙන් අප දැඩි අවධානයෙන් කටයුතු කරනවා. එමෙන්ම,  එළැඹෙන පළාත් පාලන මැතිවරණයේදී දේශපාලන ප්‍රචාරණ කටයුතු සඳහා මූල්‍ය පහසුකම් සපයාගත් ආකාර සම්බන්ධයෙන් විනිවිදභාවයෙන් කටයුතු කරන ලෙසත්, සියලු මූලාශ්‍ර වාර්තා කිරීම සම්බන්ධයෙන් සිය නීතිමය වගකීම් ඉටු කරන ලෙසත්, සියලු දේශපාලන පක්ෂ, අපේක්ෂකයින් සහ ස්වාධීන කණ්ඩායම්වලින්, අප මේ අවස්ථාවේ ඉල්ලා සිටිනවා”.

මැතිවරණ වියදම් නියාමනය කිරීමේ පනතේ මූලික පරමාර්ථ වන්නේ, ධනවත් පරිත්‍යාගශීලීන් විසින් දේශපාලන පක්ෂ සහ අපේක්ෂකයින් මත සිදුකළ හැකි අනවශ්‍ය බලපෑම් වැළැක්වීම සහ මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා අධික හා ඡන්දය මිලදී ගැනීම සහ රාජ්‍ය දේපල අවභාවිත කිරීම් වැනි නීති විරෝධී වියදම් වැළැක්වීමයි. මැතිවරණ වියදම් නියාමනය කිරීමේ පනත මෙම වසරේදී බලාත්මක වීමෙන් පසු පැවැත්වෙන පළමු මැතිවරණය මෙය වේ. ශ්‍රී ලංකාවේ දූෂණය පිටුදැකීමට, නිදහස් හා සාධාරණ මැතිවරණ වෙනුවෙන් අඛණ්ඩව කැපවී සිටින සංවිධානයක් ලෙස, TISL ආයතනය මෙම නව නීතියේ සඵලතාවය ඉදිරි මැතිවරණ සමයේදී නිරීක්ෂණය කරනු ඇත.

ඉදිරි මැතිවරණ කාලසීමාව තුල රාජ්‍ය දේපල මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා භාවිතා කිරීම් සම්බන්ධයෙන් විශ්වාසය තහවුරු කළහැකි ඕනෑම පැමිණිල්ලක් ඉදිරිපත් කර, මැතිවරණයේ සුපිළිපන් බව ආරක්ෂා කිරීම සඳහා දායක වන ලෙස TISL ආයතනය සියලු පුරවැසියන්ගෙන් ඉල්ලා සිටී.

 

தேர்தல் நோக்கங்களுக்காக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தல் மற்றும் தேர்தல் பிரச்சார நிதியளிப்பு தொடர்பிலான தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டினை TISL நிறுவனம் ஆரம்பித்து வைக்கிறது

  • 25 மாவட்டங்களிலும் தேர்தல் கண்காணிப்பு பணியினை ஆரம்பித்துள்ளது
  • தேர்தல் நோக்கங்களுக்காக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தல் மற்றும் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்து TISL நிறுவனத்திற்கு முறையிடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு
  • சம்பவங்களை முறையிட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் Apesalli.lk என்ற இணையத்தளம் அறிமுகம்

எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் நோக்கங்களுக்காக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தல் மற்றும் தேர்தல் பிரச்சார நிதியளிப்பு தொடர்பில் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளது. TISL நிறுவனமானது 2005ம் ஆண்டு தொடக்கம் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 25 மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் மேலும் 160 மேலதிக தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து தொடர்ந்தும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரச கட்டிடங்கள், அரச வாகனங்கள், அரச ஊழியர்கள், அரச அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் இதுபோன்ற பொதுச் சொத்துக்கள் தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதை பொதுமக்கள் அவதானித்தால் அல்லது அது பற்றி அறியக்கிடைத்தால் 076 322 344 2 மற்றும் 076 322 366 2 எனும் தொலைபேசி இலக்கங்களூடாக அழைப்பினை ஏற்படுத்தி அல்லது வாட்ஸ்ஆப் (WhatsApp) செயலியூடாக எமக்கு அறியத்தருமாறு TISL நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. அதேபோன்று, TISL நிறுவனத்தின் இணையத்தளமான www.apesalli.lk எனும் இணையத்தளத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளூடாகவும் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். முறைப்பாட்டை மேற்கொள்ளக்கூடியவர்கள் தமது கையடக்கத் தொலைபேசியில் Apesalli எனும் செயலியை (Mobile application) Play Store அல்லது App store ஊடாக பதிவிறக்கம் செய்து அவர்களது முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். அத்தகைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் போது, TISL நிறுவனமானது கிடைக்கப்பெற்ற அனைத்து ஆதாரங்களையும் தொகுத்து, தகவல்களை சரிபார்த்து மேலதிக நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும்.

“தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காக பொதுச் சொத்துக்களை பயன்படுத்துவதும் பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகமாகும், இது ஊழலுக்கு சமனாகும் மற்றும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் தீவிரமாக கையாளப்பட வேண்டும்” என TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நதிஷானி பெரேரா குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சார நிதியளிப்பு தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களையும் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான செல்வந்தர்களின் தேவையற்ற செல்வாக்கைத் தடுத்தல் மற்றும் பொது நிதியின் தவறான பயன்பாடு, வாக்குகளை வாங்குதல் போன்ற தேர்தலின் போது இடம்பெறக்கூடிய சட்டவிரோத செலவினங்களைத் தடுத்தல் என்பன தேர்தல் பிரச்சார நிதியளிப்புச் சட்டமொன்றின் நோக்கமாகும். இவ்வாண்டு அமுலுக்கு வந்த, தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டத்திற்கு பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கும் தேர்தலின் நீதி மற்றும் நேர்மையினை பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஓர் அமைப்பான TISL நிறுவனமானது இந்த புதிய சட்டத்தின் செயல்திறன் தொடர்பில் தொடர்ந்தும் அவதானிக்கும்.

இடம்பெறவிருக்கும் தேர்தலின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மையினை உறுதி செய்யும் வகையில் தேர்தல் நோக்கங்களுக்காக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தல் தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை TISL நிறுவனத்திடம் மேற்கொள்ளுமாறு அனைத்து பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுகிறது.

This website uses cookies to improve your web experience.