Skip links

TISL launches Apesalli.lk on International Anti-Corruption Day 2021

The landscape of corruption the world over has changed drastically due to the Covid-19 pandemic in the past two years, increasing opportunities for corruption while deepening the adverse impact of corruption upon the people.

Here in Sri Lanka, there have been numerous scandals and corruption allegations that rocked the nation in 2021 as the people of the country struggled to survive in a pandemic economy facing multiple challenges such as the loss of income opportunities and the hike in cost of living. It is in this backdrop that Transparency International Sri Lanka (TISL) marks International
Anti-Corruption Day today (Dec. 9th ). TISL has chosen “Ape salli” or “our money” as our central theme this year, in a bid to highlight corruption in the form of abuse of power and misuse of public resources, which belong to the citizens of the nation.

Former UN Secretary-General Kofi Annan once said “if corruption is a disease, transparency is a central part of its treatment.” In order to promote this treatment to corruption, as described by the former UN Secretary-General, TISL will be launching apesalli.lk today, a citizen-driven platform for activism and advocacy on anti-corruption.

Apesalli.lk provides a unique platform for the citizens to report incidents of corruption to TISL. Following a thorough verification process, TISL will also be able to advice the complainants on seeking legal redress and to take steps to file complaints directly with the authorities where possible. Citizens who have experienced or observed corruption in their day to day lives are also given a platform to write and share their stories, gain public’s attention and create a public discourse on corruption.

Apesalli.lk also facilitates reporting on election violations including misuse of state resources and other violations of election laws during campaigning periods. The website provides users the opportunity to track corruption related incidents in specific locations of the country as well as to obtain statistics on corruption-related incidents reported to Apesalli.lk.

TISL will also be releasing a review of allegations, scandals and changes in the anti-corruption landscape reported in 2021 titled, “Hindsight 2021.”, which simplifies and summarizes them and highlights what actions have been taken and can be taken.

TISL’s Executive Director Nadishani Perera in her message to mark International Anti-Corruption Day shared the following thoughts.

“There have been many developments that took place this year that are extremely concerning. The controversial tax amnesty granted earlier this year, the hastily passed Colombo Port City Economic Commission bill, multiple alleged corruption scandals related to sugar, fertilizer and other necessities, are but a few of the worrying developments that took place this year.

However, such incidents and unhealthy measures could have been prevented or mitigated if there was greater transparency as well as accountability pertaining to the decisions. It is also paramount to ensure greater transparency in the systems and actions of the Government and public sector. In addition, the citizens should be able to understand the corruption that is taking place as well as its far-reaching implications. This would lead to greater public demand for accountability from public representatives and state officials.”

“At a time when our country is making strides in vaccinating people to combat the Covid 19 pandemic, let us also commit to fight the pandemic of corruption that has plagued this country for decades, much longer than Covid-19, preventing the fruits of development initiatives from reaching the most needed areas, exacerbating inequalities and causing the country to stagnate as a developing nation.”

Marking Anti-Corruption Day, TISL calls upon all actors from the state, private and community to rise up against corruption in our nation and presents Apesalli.lk as a tool that would facilitate citizen activism against corruption.

 

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් ජාත්‍යන්තර දූෂණ විරෝධී දිනයට සමගාමීව “Apesalli.lk” වෙබ් අඩවිය දියත් කරයි.

කොවිඩ් 19 වසංගත තත්වය හේතුවෙන් පසුගිය වසර දෙකක කාලය තුළ ලෝකයේ දූෂණ ක්‍රියා සිදුකිරීමේ ඇති ප්‍රවණතාවය ඉහල ගොස් ඇති අතර ජනතාව මත දූෂණයේ අහිතකර බලපෑම් ඉහළ නංවමින් ගෝලීය දූෂණයේ වපසරිය සීඝ්‍ර වෙනසකට මුහුණ පා ඇත.

ජීවන වියදම ඉහළ යමින් පවතින සහ ආදායම් මාර්ග හිඟ වූ වසංගත ආර්ථිකයක් තුළ රටේ ජනතාව ජීවත් වීමට අරගල කරන පසුබිමක 2021 වර්ෂයේ දී ජාතිය කැළඹූ දූෂණ චෝදනා රාශියක් ශ්‍රී ලංකාව තුළ වාර්තා විය.

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් ජාත්‍යන්තර දූෂණ විරෝධී දිනය වන අද දින (දෙසැ. 9) සනිටුහන් කරන්නේ මෙවැනි ගැටළුසහගත පසුබිමකය. ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් මෙම වසරේ කේන්ද්‍රීය තේමාව ලෙස “අපේ සල්ලි ” තෝරාගෙන ඇති අතර එමගින් මහජන සම්පත් අවභාවිතය මෙන්ම දූෂණය හරහා බලය අනිසි ලෙස භාවිතා කිරීම ඉස්මතු කිරීමට උත්සාහ කරයි.

එක්සත් ජාතීන්ගේ හිටපු මහලේකම් වන කොෆි අනන් වරක් ප්‍රකාශ කොට ඇත්තේ “දූෂණය යනු රෝගයක් නම්, විනිවිදභාවය එහි ප්‍රතිකාරයේ කේන්ද්‍රීය කොටසකි” යනුවෙනි.

එක්සත් ජාතීන්ගේ හිටපු මහලේකම්වරයා විසින් විස්තර කරන ලද දූෂණය මැඩපැවැත්වීමේ අරමුණ සාක්ෂාත් කරගැනීමේ උත්සාහයක් ලෙස, ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් දූෂණයට එරෙහි සමාජ ක්‍රියාකාරිත්වය උදෙසා වන පුරවැසි වෙබ් අවකාශයක් ලෙස Apesalli.lk අද දින දියත් කරනු ඇත.

Apesalli.lk පුරවැසියන්ට දූෂණ සිදුවීම් TISL වෙත වාර්තා කිරීමට සුවිශේෂී වේදිකාවක් සපයයි. සවිස්තරාත්මක සත්‍යාපන ක්‍රියාවලියකින් පසුව, ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ආයතනය මගින් නීතිමය සහන ලබාගැනීම සම්බන්ධයෙන් පැමිණිලිකරුවන්ට උපදෙස් දීමටද, හැකි අවස්ථාවලදී බලධාරීන් වෙත සෘජුවම පැමිණිලි කිරීමට ද පියවර ගනු ලැබේ. එදිනෙදා ජීවිතයේ දී දූෂණය අත්විඳ ඇති සහ නිරීක්ෂණය කර ඇති පුරවැසියන් හට ඔවුන්ගේ කථා ලිවීමට ද, ඒවා රටේ සෙසු ජනතාව සමඟ බෙදා ගැනීමටද ,මහජන අවධානය දිනා ගැනීමට සහ දූෂණය පිළිබඳ මහජන කතිකාවතක් ඇති කිරීමෙහිලා මෙම වෙබ් අඩවිය මගින් වේදිකාවක් ලබා දේ.

Apesalli.lk වෙබ් අඩවිය, රාජ්‍ය සම්පත් අවභාවිතය සහ මැතිවරණ ප්‍රචාරක කාලසීමාවන් තුළ සිදුවන වෙනත් මැතිවරණ නීති උල්ලංඝණය කිරීම් පිළිබඳ වාර්තා කිරීමට ද පහසුකම් සපයයි.

මෙම වෙබ් අඩවිය මඟින් රටේ නිශ්චිත ප්‍රදේශවල දූෂණ හා සම්බන්ධ සිද්ධීන් නිරීක්ෂණය කිරීමට මෙන්ම Apesalli.lk වෙබ් අඩවිය වෙත වාර්තා වන දූෂණ හා සම්බන්ධ සිදුවීම් පිළිබඳ සංඛ්‍යාලේඛන ලබා ගැනීමටද පරිශීලකයින්ට අවස්ථාව ලබා දෙනු ඇත.

අද දිනයේදී ,ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් මෙම වසරේ දූෂන චෝදනා, සහ දූෂණ විරෝධී වපසරියෙහි වෙනස්කම් පිළිබඳ සාරාංශත කොට මේ සදහා ගෙන ඇති සහ ගත හැකි ක්‍රියාමාර්ගද ඇතුළත් සමාලෝචනයක් ලෙස “Hindsight 2021″ වාර්තාව නිකුත් කරනු ඇත.

ජාත්‍යන්තර දූෂණ විරෝධී දිනය නිමිත්තෙන් TISL විධායක අධ්‍යක්ෂිකා නදිශානි පෙරේරා මහත්මිය සිය පණිවිඩය නිකුත් කරමින් මෙසේ අදහස් දැක්වූවාය.

“මේ වසරේ සිදු වූ අතිශයින් සැලකිලිමත් විය යුතු කරුණු රාශියක් තිබේ. මේ වසර මුලදී ලබාදුන් ප්‍රශ්න සහගත බදු සමාව, කඩිනමින් සම්මත වූ කොළඹ වරාය නගර ආර්ථික කොමිෂන් සභා පනත් කෙටුම්පත, සීනි, පොහොර සහ අනෙකුත් අවශ්‍යතා සම්බන්ධ දූෂණ වංචා ආදිය, මේ වසරේ සිදු වූ අවධානයට ලක්විය යුතු සිදුවීම්වලින් කිහිපයක් පමණි.

රජය විසින් ගනු ලබන තීන්දු තීරණයන්හි වගවීම සහ විනිවිදභාවය ඇත්නම් මෙවැනි හානිකර සිදුවීම් බොහොමයක් අවම කරගැනීමේ හෝ වළක්වා ගැනීමේ හැකියාව ඇත. එමෙන්ම, රජයේ සහ රාජ්‍ය අංශයේ පද්ධති සහ ක්‍රියාවන්හි ඉහළ විනිවිදභාවයක් සහතික කිරීම ද ඉතා වැදගත් වේ. මෙයට අමතරව, සිදුවෙමින් පවතින දූෂණ කටයුතු මෙන්ම එම කටයුතු මගින් සිදුවන හානිකර බලපෑම පිළිබඳව පුරවැසියන්ට මනා අවබෝධයක් තිබිය යුතුයි. එමගින් මහජන නියෝජිතයන්ගේ සහ රාජ්‍ය නිලධාරීන්ගේ වගවීම පිළිබඳ පවතින මහජන ඉල්ලුම ඉහළ නැංවෙනු ඇත.

කොවිඩ් 19 වසංගතයට එරෙහිව සටන් කිරීම සඳහා මහජනතාවට එන්නත් ලබාදීමේ ප්‍රගතියක් අත්පත් කර ගනිමින් සිටින මොහොතක, මෙරට සංවර්ධනයෙහි ඵල නෙළා ගැනීමට බාධා පමුණුවමින් , අසමානතාවයන් ඉහළ නංවමින්, ශ්‍රී ලංකාව වසර ගණනක් මුළුල්ලෙහි සංවර්ධනය වෙමින් පවතින එක තැනක සිරවූ රටක් බවට පත් කළ, දශක ගණනාවක් මුළුල්ලෙහි මෙරට පීඩාවට පත් කළ දූෂණය නැමැති වසංගතයට එරෙහිව ක්‍රියාත්මක වීමටත් අපි කැපවෙමු.”

මෙවර දූෂණ විරෝධී දිනය සනිටුහන් කරමින් දූෂණයට එරෙහිව නැගී සිටින ලෙස ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය රාජ්‍ය, පෞද්ගලික, ප්‍රජාව යන සියලුම ක්‍රියාකාරීන්ගෙන් ඉල්ලා සිටීන අතර දූෂණයට එරෙහි පුරවැසි ක්‍රියාකාරිත්වයට දායකත්වයක් ලබාදෙන එක් මෙවලමක් ලෙස Apesalli.lk වෙබ් අඩවිය හඳුන්වා දෙනු ලබයි.

 

2021 ஆம் ஆண்டின் ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தில் Apesalli.lk எனும் இணையத்தளத்தினை அறிமுகம் செய்கிறது ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம்

கடந்த இரண்டு வருடங்களில் கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது, ஊழலுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது ஊழலின் பாதகமான விளைவுகள் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது.

2021 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் இலங்கையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் நிலவுகின்ற இந்த இக்கட்டான தொற்றுப்பரவல் காலப்பகுதியில் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இயன்றளவு கொண்டு நாடாத்த முயல்கின்ற இவ்வேளையில், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் ஏராளமாக அதிகரித்துள்ளன. இந்த விடயத்தினை பின்னணியாகக் கொண்டு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழலுக்கெதிரான சர்வதேச தினமான (டிசம்பர் 09) இன்றைய தினத்தில் இவ்விடயத்தினை முன்னிலைப்படுத்தி அடையாளப்படுத்துகிறது. நாட்டின் பொது வளங்களை தவறாக பயன்படுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது இவ்வாண்டின் ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தின் கருப்பொருளாக “Ape Salli” அல்லது “எமது பணம்” எனும் விடயத்தினை தேர்ந்தெடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் கருத்து தெரிவிக்கையில் “ஊழல் ஓர் நோயாக இருப்பின் வெளிப்படைத்தன்மை அதன் மத்திய சிகிச்சைப் பகுதியாகும்” என குறிப்பிட்டார். முன்னாள் பொதுச் செயலாளர் குறிப்பிட்டது போல் ஊழலுக்கு எதிராக இந்த வெளிப்படைத்தன்மை எனும் சிகிச்சையை ஊக்குவிப்பதற்காகவே TISL நிறுவனம் இன்று Apesalli.lk எனும் இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஊழலுக்கெதிரான சமூக செயற்பாட்டிற்கான பொதுமக்களின் தளமாகும்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்திடம் ஊழலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாட்டினை மேற்கொள்ள Apesalli.lk எனும் இணையத்தளமானது நாட்டு மக்களுக்கு உதவுகிறது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் சரிபார்த்து உறுதி செய்ததைத் தொடர்ந்து, முறைப்பாட்டினை மேற்கொண்டவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து TISL நிறுவனமானது ஆலோசனைகளை வழங்கும். அதேபோல் அன்றாட வாழ்வில் ஊழலுடன் தொடர்புடைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவ்வாறான சம்பவங்களை அவதானித்தவர்கள் தங்களது அனுபவத்தினை இத்தளத்தினூடாக ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளவும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவும் மற்றும் குறித்த சம்பவம் தொடர்பில் பொதுவில் விவாதிக்கவும் பொதுமக்களால் முடியும்.

மேலும் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்கள் தவறாக பயன்படுத்துதல் போன்ற தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பிலும் Apesalli.lk இணையத்தளத்தினூடாக பொதுமக்களால் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். மேலும் Apesalli.lk இணையத்தளதினூடாக நாட்டின் எந்த பகுதியில் எவ்வகையான ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்வையிடவும் ஊழல் சம்பவங்களுடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களை பெற்றுக்கொள்ளவும் இணையத்தள பாவனையாளர்களுக்கு Apesalli.lk வாய்ப்பளிக்கிறது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழல்கள், அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஓர் தொகுப்பாக “Hindsight 2021” என்ற அறிக்கையினை TISL நிறுவனம் வெளியிடுகிறது. இவ் அறிக்கையானது குறித்த ஊழல் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துகிறது.

ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நதிஷானி பெரேரா கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டில் மிகவும் முக்கியமான பல விடயங்கள் நடந்துள்ளது. அதாவது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய வரி விலக்கு, அவசரமாக நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், சீனி இறக்குமதி மோசடி, உரக் கொள்வனவு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான பல ஊழல் மோசடிகள் இந்த ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான சம்பங்களாகும்” என தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எவ்வாறாயினும், முடிவுகள் எடுக்கும் போது அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் காணப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளை தடுத்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம். பொது மற்றும் தனியார் துறைகளின் செயற்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது மிக முக்கியமாகும். அதுமாத்திரமின்றி, இடம்பெறுகின்ற ஊழல் தொடர்பிலான சம்பவங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களும் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு நடைபெறுமாயின், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பொறுப்புக்கூறலுக்கான அவசியத்தினை பொதுமக்கள் கோருவதற்கும் வழிவகுக்கும்” என குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முன்னேற்றகரமாக செலுத்தப்பட்டு வரும் இவ்வேளையில் பல தசாப்தங்களாக நாட்டைப் பீடித்துள்ள ஊழல் தொற்றுக்கு எதிராக நாமும் செயற்படுவோம் எனும் நிலைப்பாட்டில் ஒன்றிணைவோம். ஊழலானது நாட்டின் தேவையான அபிவிருத்திகளை தடுப்பதனால் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பட்டியலில் எமது நாட்டினை தொடர்ந்தும் தேக்கி வைத்துள்ளது.

ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தினை அடையாளப்படுத்தும் வகையில், எமது நாட்டில் நடைபெறும் ஊழல் சம்பவங்களுக்கு எதிராக எழுச்சி பெறுமாறு பொது, தனியார் மற்றும் சமூக அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் அதேவேளை ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் கருவியாக TISL நிறுவனம் Apesalli.lk எனும் இணையத்தளத்தினை அறிமுகப்படுத்துகிறது.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.