Skip links

TISL Demands Transparency in Adani Wind Power Project: Files Right to Information Applications

Transparency International Sri Lanka (TISL) has filed a series of Right to Information (RTI) requests with public authorities seeking crucial information regarding the transparency, legality, evaluation process, pricing, government involvement, and the Environmental Impact Assessment (EIA) related to the Wind Power Project in Mannar and Pooneryn, involving India’s Adani Group.

Earlier this year, Adani Green Energy (Sri Lanka) Ltd was provisionally approved for two wind power plants of 250 MW in Mannar and 234 MW in Pooneryn. TISL is deeply concerned about the lack of transparency surrounding this project, which has raised significant economic and ecological concerns.

Recently it was reported that Sri Lanka will be paying a fixed price of 8.26 US cents per KW (subject to payment in Sri Lankan Rupees as per the actual foreign exchange rate) generated from wind power over the next 20 years. The relevant proposal forwarded by the Power and Energy Minister received the Cabinet approval on May 6, 2024. This unit price contrasts starkly with the current global price, and the continuously decreasing costs associated with wind power generation. According to the statistics of the International Renewable Energy Agency (IRENA), the global weighted average levelized cost of electricity (LCOE) of onshore wind fell by 56%, from 8 US cents to 3 US cents per KW between 2010 and 2022.

Additionally, senior environmentalists have warned about irreversible ecological damage to the Mannar Corridor, one of the world’s critical migratory bird corridors, due to the installation of wind turbines in the area. Concerns have also been raised about the credibility of the Environmental Impact Assessment (EIA) process.

In light of these serious concerns, TISL has filed a total of 11 Right to Information (RTI)requests with key government bodies, including the Office of the Cabinet of Ministers, Power and Energy Ministry, Finance Ministry, Sustainable Energy Authority, Central Environmental Authority (CEA), Ceylon Electricity Board (CEB), and Ministry of Tourism and Land. These requests primarily seek information on:

  1. Transparency and legality of the bidding process: Details on whether the Government of Sri Lanka called for bids and if all the bids/proposals were received.
  2. Evaluation and selection process: Criteria and indicators used to award the Project to Adani Green Energy Ltd, individuals involved in the bid evaluation and winner selection process, and clarification on whether the Wind Power Project is a government-to-government arrangement.
  3. Pricing and cost benefits: Documentation demonstrating energy and cost benefits for Sri Lanka, unit price decided for the Project, and justification for any pricing higher than market rates.
  4. Need and risk assessments: Details about need assessment and risk assessment conducted for the Project, and mitigation methods outlined for potential risks.
  5. Decision-making process: Information regarding cabinet approval for unsolicited proposals, responses to Request for Proposals, and certified copies of all documentation, communications, analyses, assessments, and reports/minutes related to the decision-making process.
  6. EIA: Documentation detailing the analysis and decision of the Central Environment Authority to grant approval based on the EIA.
  7. Land Acquisition: Whether the land acquisition in Mannar and Pooneryn was approved by Cabinet, whether the procedure laid out in the Land Acquisition Act is being followed, and documents detailing the locations, extent and the demarcation of the lands approved for acquisition.

TISL notes that it has not received comprehensive and timely responses to most of these queries so far, and therefore has resorted to the next step of appealing to relevant designated officers of the authorities.

TISL urges the government to commit to upholding transparency of this crucial project and to address the concerns raised, for the greater good of the country and its people, as the trustees of our nation’s public resources.

තොරතුරු දැනගැනීමේ අයිතිය (RTI) පිළිබඳ පනත යටතේ TISL ආයතනය අදානි සුළං විදුලි බල ව්‍යාපෘතියෙහි තොරතුරු විමසයි

ඉන්දියාවේ අදානි සමූහ ව්‍යාපාරය සම්බන්ධ වී මන්නාරම සහ පුනරින් ආශ්‍රිතව සිදු කිරීමට නියමිත සුළං විදුලි බල ව්‍යාපෘතියෙහි විනිවිදභාවය, නීත්‍යානුකූලභාවය, ඇගයීම් ක්‍රියාවලිය, මිල නියම කිරීම, රජයේ මැදිහත්වීම සහ පාරිසරික බලපෑම් ඇගයීම (EIA) යනාදිය සම්බන්ධයෙන් තොරතුරු ඉල්ලා ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් අදාළ රාජ්‍ය ආයතන වෙත තොරතුරු දැනගැනීමේ අයිතිය (RTI) පිළිබඳ පනත යටතේ තොරතුරු ඉල්ලුම්පත් රැසක් පසුගියදා ගොනු කරන ලදී.

සීමාසහිත අදානි ග්‍රීන් එනර්ජි (ශ්‍රී ලංකා) සමාගම වෙත මෙගා වොට් 250ක සහ මෙගා වොට් 234ක ධාරිතාවයෙන් යුතු සුළං බලාගාර දෙකක් මන්නාරම සහ පුනරීන් ප්‍රදේශ වල ඉදි කිරීම සඳහා මේ වසර මුලදී තාවකාලික අනුමැතිය ලබා දී ඇත. බරපතල ආර්ථික හා පාරිසරික ගැටළු වලට තුඩු දිය හැකි යැයි සැක කරන මෙම ව්‍යාපෘතිය පිළිබඳ ප්‍රමාණවත් විනිවිදභාවයක් නොමැති වීම පිළිබඳව TISL ආයතනය දැඩි අවධානය යොමු කර ඇත.

මෙම ව්‍යාපෘතිය යටතේ ශ්‍රී ලංකාවට ඉදිරි වසර 20 පුරාවට සුළං බලයෙන් නිපදවන විදුලි කිලෝවොට් ඒකකයකට ඇමෙරිකානු ශත 8.26ක ස්ථාවර මිලක් (පවතින විදේශ විනිමය අනුපාතිකය අනුව ශ්‍රී ලංකා රුපියල්වලින්) ගෙවීමට සිදුවන බව පසුගියදා වාර්තා විය. මීට අදාළ යෝජනාව විදුලිබල හා බලශක්ති අමාත්‍යවරයා විසින් ඉදිරිපත් කරනු ලදුව 2024 මැයි 6 වැනි දින අමාත්‍ය මණ්ඩලය විසින් අනුමත කර ඇත. මෙම මිලත් සුළං බලයෙන් නිපදවන විදුලි ඒකකයක වත්මන් ගෝලීය මිලත් අතර විශාල වෙනසක් පවතියි. ජාත්‍යන්තර පුනර්ජනනීය බලශක්ති ආයතනයේ (International Renewable Energy Agency – IRENA) සංඛ්‍යාලේඛනවලට අනුව, 2010 සිට 2022 දක්වා කාලය තුළ, වෙරළබඩ සුළං බලශක්තිය සඳහා ගෝලීය බරිත-සාමාන්‍ය විදුලි පිරිවැය (the global weighted-average levelised cost of electricity) කිලෝවොට් එකකට ඇමෙරිකානු ශත 8 සිට ඇමෙරිකානු ශත 3 දක්වා 56% කින් පහත වැටී ඇත.

මීට අමතරව, ලෝකයේ වැදගත් සංක්‍රමණික පක්ෂි කොරිඩෝවක් ලෙස සැළකෙන මන්නාරම ප්‍රදේශයේ පිහිටුවීමට නියමිත සුළං ටර්බයින හේතුවෙන් නැවත හැරවිය නොහැකි පාරිසරික හානියක් සිදුවන බවට ජ්‍යෙෂ්ඨ පරිසරවේදීන් අනතුරු අඟවා තිබේ. ව්‍යාපෘතියේ පාරිසරික බලපෑම් ඇගයීම් ක්‍රියාවලියේ විශ්වසනීයත්වය පිළිබඳව ද චෝදනා එල්ල වී ඇත.

මෙම කරුණු සැලකිල්ලට ගනිමින්, TISL ආයතනය විසින් අමාත්‍ය මණ්ඩලය, විදුලිබල හා බලශක්ති අමාත්‍යාංශය, මුදල් අමාත්‍යාංශය, සුනිත්‍ය බලශක්ති අධිකාරිය, මධ්‍යම පරිසර අධිකාරිය, ලංකා විදුලිබල මණ්ඩලය සහ සංචාරක සහ ඉඩම් අමාත්‍යංශය වෙත තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ පනත යටතේ තොරතුරු ඉල්ලුම් පත් 11ක් යොමු කරමින් ව්‍යාපෘතියට අදාළ පහත සඳහන් මූලික තොරතුරු ඉල්ලා සිටින ලදී.

  1. ප්‍රසම්පාදන ක්‍රියාවලියේ විනිවිදභාවය සහ නීත්‍යානුකූලභාවය: ශ්‍රී ලංකා රජය ටෙන්ඩර් කැඳවූයේද යන්න සහ ලැබුණු සියලුම ලංසු/යෝජනා භාරගත්තේද යන්න.
  2. ඇගයීම සහ තෝරා ගැනීමේ ක්‍රියාවලිය: සීමාසහිත අදානි ග්‍රීන් එනර්ජි සමාගම වෙත ව්‍යාපෘතිය ප්‍රදානය කිරීමට භාවිතා කරන ලද නිර්ණායක, ටෙන්ඩර් ඇගයීමට සහ ජයග්‍රාහකයින් තෝරා ගැනීමේ ක්‍රියාවලියට සම්බන්ධ පුද්ගලයින්, මෙම සුළං බල ව්‍යාපෘතිය රජයන් දෙකක් අතර ගනුදෙනුවක්ද යන්න, සහ ඉන්දියානු රජයට අයත් නොවන පුද්ගලික සමාගමක් වන සීමාසහිත අදානි ග්‍රීන් එනර්ජි සමාගම වෙත මෙම ව්‍යාපෘතිය ප්‍රදානය කිරීමේ පදනම.
  3. මිල තීන්දු කිරීම, පිරිවැය සහ ප්‍රතිලාභ: ශ්‍රී ලංකාවට බලශක්ති ප්‍රතිලාභ සහ පිරිවැය ප්‍රතිලාභ පෙන්නුම් කරන ලියකියවිලි, වෙළඳපොළ මිලට වඩා වැඩි මිලකට ව්‍යාපෘතිය හරහා ලබා ගන්නා සුළං විදුලි ඒකකයකට ගෙවීම සාධාරණීකරණය කළ හැකිද යන්න.
  4. අවශ්‍යතාවයන් සහ අවදානම තක්සේරු කිරීම: ව්‍යාපෘතිය සඳහා සිදු කරන ලද අවශ්‍යතා තක්සේරුව සහ අවදානම් තත්ත්ව තක්සේරුව පිළිබඳ විමසීම්, සහ ඇති විය හැකි අවදානම් තත්ත්ව අවම කිරීමේ ක්‍රම.
  5. තීරණ ගැනීමේ ක්‍රියාවලිය: නොකැඳවූ යෝජනා (unsolicited proposals) සඳහා කැබිනට් අනුමැතිය ලබා දීම, ආයෝජන යෝජනා සඳහා වන ඉල්ලීම්වලට (Request for Proposals) යැවූ ප්‍රතිචාර, සීමාසහිත අදානි ග්‍රීන් එනර්ජි සමාගම වෙත ව්‍යාපෘතිය ප්‍රදානය කිරීමට අදාළ තීරණ ගැනීමේ ක්‍රියාවලිය, සහ ඊට අදාළ සියලුම ලියකියවිලි, සන්නිවේදනයන්, විශ්ලේෂණ හෝ ඇගයීම් වාර්තාවල සහතික කළ පිටපත්
  6. පාරිසරික බලපෑම් ඇගයීම (EIA): පාරිසරික බලපෑම් ඇගයීම මත පදනම්ව මධ්‍යම පරිසර අධිකාරිය කරන ලද විශ්ලේෂණය සහ ව්‍යාපෘතියට අනුමැතිය ලබා දීමට ගත් තීරණය පිළිබඳ විස්තරාත්මක ලේඛන.
  7. ඉඩම් අත්පත් කර ගැනීම: ව්‍යාපෘතිය සඳහා මන්නාරම සහ පුනරින් ප්‍රදේශ වල ඉඩම් අත්පත් කර ගැනීම කැබිනට් මණ්ඩලය විසින් අනුමත කර තිබේද, ඉඩම් අත්පත් කර ගැනීමේ පනතේ දක්වා ඇති ක්‍රියා පටිපාටිය නිසි ලෙස අනුගමනය කර තිබේද, අත්පත් කර ගැනීම සඳහා අනුමත ඉඩම්වල පිහිටීම, ප්‍රමාණය සහ සීමා නිර්ණය විස්තර කරන ලියකියවිලි.

මෙම තොරතුරු ඉල්ලුම්පත් බොහොමයකට මෙතෙක් සම්පූර්ණ සහ කාලීන ප්‍රතිචාර නොලැබුණු බැවින් TISL ආයතනය අදාළ ආයතන වල නම් කළ නිලධාරීන් වෙත අභියාචනා කිරීමේ මීළඟ පියවරට යොමු විය.

මෙම තීරණාත්මක ව්‍යාපෘතියේ විනිවිදභාවය තහවුරු කිරීමටත්, රටේ සහ ජනතාවගේ යහපත වෙනුවෙන් ව්‍යාපෘතිය සම්බන්ධයෙන් පැන නැගී ඇති ගැටළු විසඳීමටත් කැපවන ලෙස අප රටේ සම්පත්වල භාරකරුවන් ලෙස සැළකෙන රජයෙන් TISL ආයතනය ඉල්ලා සිටියි.

 

RTI விண்ணப்பங்களை தாக்கல் செய்வதன் மூலம் அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கோருகிறது TISL நிறுவனம்

இந்தியா அதானி குழுமத்தின் மன்னார் மற்றும் பூநகரியின் காற்றாலை மின் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை, சட்டபூர்வமான தன்மை, மதிப்பீட்டு செயல்முறை, விலை நிர்ணயம், அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், அதானி கிரீன் எனர்ஜி (ஸ்ரீலங்கா) லிமிடெட் மன்னாரில் 250 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் இரண்டு காற்றாலைகளுக்கு தற்காலிக அனுமதியைப் பெற்றது. முக்கியமான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து TISL பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அடுத்த 20 ஆண்டுகளுக்கு (தற்போதைய மாற்று விகிதத்தில் இலங்கை ரூபாயில்) காற்றாலை மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு KW க்கு அமெரிக்க சென்ட் 8.26 என்ற நிலையான விலையை இலங்கை செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான முன்மொழிவை  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு 2024 மே 6 ம் திகதி அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த விலைக்கும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் தற்போதைய உலகளாவிய விலைக்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது. சர்வதேச புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முகமையின் (International Renewable Energy Agency – IRENA) புள்ளிவிவரங்களின்படி, 2010 மற்றும் 2022 க்கு இடையில், கடலோர காற்றாலை மின்சாரத்திற்கான உலகளாவிய எடையுள்ள-சராசரி சமப்படுத்தப்பட்ட மின்சாரம் (LCOE) ஒரு KW க்கு 8 அமெரிக்க சென்ட்களில் இருந்து 3 அமெரிக்க சென்ட்களாக, 56 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும், உலகின் இடம்பெயர்ந்த பறவைகளின் முக்கியமான பாதையான மன்னார் வழித்தடத்தில் காற்றாலை விசையாழிகள் நிறுவப்படுவது சுற்றுச்சூழலுக்கு மீள முடியாத தீங்கு விளைவிப்பதாக சிரேஷ்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்தும் கரிசனை எழுப்பப்பட்டுள்ளன.

இந்த குறிப்பிடத்தக்க விடயங்கள் காரணமாக, TISL நிறுவனமானது,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மொத்தமாக 11 விண்ணப்பங்களை முக்கிய அரச அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ளது. இதில் அமைச்சரவை அலுவலகம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, நிலையான எரிசக்தி அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA), இலங்கை மின்சார சபை (CEB), சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகிய அரச நிறுவனங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

இந்த விண்ணப்பங்கள் பின்வருவனவற்றைப் பற்றிய தகவல்களைத் கோருகின்றன:

  1. விலைமானுக்கோரல் செயன்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வத் தன்மை: இலங்கை அரசாங்கம் விலைமானுக்கோரல்களை மேற்கொண்டதா அல்லது முன்மொழிவுகள் பெறப்பட்டதா என்பது குறித்த விவரங்கள்.
  2. மதிப்பீடு மற்றும் தேர்வு செயன்முறை: மதிப்பீடு மற்றும் தேர்வு செயல்முறையானது அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு திட்டத்தை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அடிப்படை நியமங்கள் தெளிவுபடுத்துதல், விலைமானுக்கோரல்களின் மதிப்பீடு மற்றும் விலைமானுக்கோரலில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் / நபர் தேர்வு செயல்முறையில் பங்கேற்கும் நபர்களை அடையாளம் காண்பது மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டமானது அரசாங்கத்திற்கு-அரசாங்கம் இடையேயான ஏற்பாடா என்பது பற்றி தெளிவுபடுத்துதல்.
  3. விலை நிர்ணயம் மற்றும் செலவு நன்மைகள்: இலங்கைக்கான எரிசக்தி மற்றும் செலவு நன்மைகளை நிரூபிக்கும் ஆவணங்கள், திட்டத்திற்காக தீர்மானிக்கப்பட்ட அலகு விலை மற்றும் சந்தை விகிதங்களை விட அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள்.
  4. தேவை மற்றும் அபாய மதிப்பீடுகள்: திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தேவைகளின் மதிப்பாய்வு மற்றும் அபாய மதிப்பாய்வு பற்றிய விவரங்கள், மற்றும் சாத்தியமான அபாயங்களை தவிர்க்கும் முறைகள்.
  5. முடிவெடுக்கும் செயன்முறை: கோரப்படாத திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல், முன்மொழிவு கோரிக்கைகளுக்கான பதில்கள் மற்றும் முடிவெடுக்கும் செயன்முறை தொடர்பான அனைத்து ஆவணங்கள், தகவல்தொடர்புகள், பகுப்பாய்வுகள், மதிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள்/குறிப்புகள்  ஆகியவற்றின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதிகள்.
  6. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA): சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பகுப்பாய்வு மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதற்கான முடிவை விவரிக்கும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள்.
  7. காணி கையகப்படுத்துதல்: மன்னார் மற்றும் பூனேரியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியதா, காணிகள் கையகப்படுத்தும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படுகிறதா?, கையகப்படுத்த அனுமதிக்கப்பட்ட காணிகளின் அமைவிடம், பரப்பு மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள்.

இந்த தகவல் கோரிக்கைகளில் பலவற்றிற்கு இதுவரை முழுமையான மற்றும் சரியான நேரத்தில் பதில்கள் கிடைக்காததால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகளிடம்  மேன்முறையீடு செய்வதன் மூலம் TISL அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நமது நாட்டின் வளங்களின் பாதுகாவலராகக் கருதப்படும் அரசாங்கம், இந்த முக்கியமான திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக இத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் அர்ப்பணிப்புடன் இருக்குமாறு TISL கேட்டுக்கொள்கிறது.

This website uses cookies to improve your web experience.