The asset declarations of over 100 persons who are obligated to submit their asset and liabilities declarations, including top officials and the President, are now publicly accessible on the Asset Declarations webpage of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC). This is an interim measure to make asset declarations public under the Anti-Corruption Act No. 09 of 2023 (ACA), while CIABOC establishes a centralized electronic system in compliance with the law. While this step towards public transparency is a welcome move, concerns have emerged regarding the extent of information being made available.
TISL expresses deep concern over a significant amount of crucial information that has been arbitrarily and unnecessarily redacted. Information such as bank balances and the dates on which accounts were opened are not revealed, raising serious concerns as to the transparency and effectiveness of these declarations.
According to Section 88(1) of the Anti-Corruption Act, only specific information in the asset declarations shall be redacted:
a. The address of the residence of the declarant or of any other person, whose assets are declared by the declarant;
b. Full address/es of declared real estate except information pertaining to the ward and district in which the real estate is situated;
c. Date of birth, National Identity Card Number, Passport Number or any other number recognized by the relevant authorities for the purpose of identification of individuals mentioned in the declaration
d. Bank account numbers; or
e. Any other deposit details
It appears the authority has taken a very broad approach of interpretation to redact crucial information such as bank balances and dates, in complete disregard of the spirit and intention of the law, thereby defeating the purpose of making asset declarations publicly available. The provision in ACA 88(1)(e) stating “any other deposit details” appears to be misinterpreted. The intention of this provision, seemingly, is to refer to ‘any other’ deposit types that are not bank accounts following the mentioning of ‘bank accounts’ specifically in 88(1)(d). Had the provision intended to include bank account balances, Section 88(1)(d) would have provided for ‘bank account balances and numbers’.
Such arbitrary misinterpretation of the Act undermines the purpose of the asset declaration system and public access to the same, rendering its implementation ineffective. This potential creation of a loophole to skirt the law by public officials and responsible institutions is deeply concerning, and breeds mistrust in the CIABOC’s commitment to effective implementation of the anti-corruption law.
Furthermore, the ACA mandates the CIABOC to verify the identity of individuals requesting redacted asset declarations, which could be done through the collection of the name, National Identity Card number and telephone number. Despite this, CIABOC has introduced a mandatory email address requirement, which is not necessary for identity verification, particularly when essential identifiers are already required. TISL is concerned that this unnecessary and unmandated requirement creates an additional barrier, restricting access to asset declarations to a large number of the public across the island.
Making asset declarations public is a recommendation by the International Monetary Fund that is now an element in the Government Action Plan for implementation. One of the objectives is to enable the public to monitor potential unjust enrichment by public officials, which is undermined by the actions of CIABOC with its unnecessary extent of redaction. For public access to be meaningful in the current reform process, TISL urges the CIABOC to reconsider the extent of the current redactions in the spirit of fully implementing the law, ensuring that crucial and sufficient information is available for citizens in holding public officials accountable. Swift action needs to be taken, considering the effective utilisation of such publicly accessible asset declarations, especially in implementing upcoming laws on Proceeds of Crime and Beneficial Ownership.
වත්කම් ප්රකාශන මහජනතාවට විවෘත කිරීමේදී අත්යවශ්ය තොරතුරු ඉවත් නොකරන ලෙස TISL ආයතනය අල්ලස් කොමිසමෙන් ඉල්ලා සිටියි.
ජනාධිපතිවරයා ඇතුළු ඉහළ නිලධාරීන් 100කට අධික පිරිසකගේ වත්කම් සහ බැරකම් ප්රකාශන මේ වන විට අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC) මගින් ඊටම වෙන්වූ වෙබ් පිටුවක ප්රසිද්ධ කර ඇත. 2023 අංක 09 දරන දූෂණ විරෝධී පනතට අනුකූලව වත්කම් ප්රකාශන ප්රසිද්ධියට පත් කිරීම සඳහා මධ්යගත ඉලෙක්ට්රොනික පද්ධතියක් ස්ථාපිත කරන තෙක් වන අතරමැදි පියවරක් ලෙස මෙය සැලකිය හැකිය. විනිවිදභාවය වැඩි කිරීම සඳහා ගත් මෙම පියවර පිළිබඳ ප්රසාදය පළ කරන නමුත්, ප්රසිද්ධ කර ඇති තොරතුරු ප්රමාණය පිළිබඳව ගැටලු මතු වී තිබේ.
මෙම ප්රකාශන ප්රසිද්ධ කිරීමේදී ඒවායේ අඩංගු වැදගත් තොරතුරු සැලකිය යුතු ප්රමාණයක් අත්තනෝමතික ලෙස සහ අනවශ්ය පරිදි ඉවත් කිරීම පිළිබඳව TISL ආයතනය සිය අප්රසාදය පළ කරයි. බැංකු ගිණුම්වල ශේෂයන් සහ එම ගිණුම් විවෘත කළ දිනයන් වැනි තොරතුරු මෙහිදී ඉවත් කොට ඇත. මේ නිසා මෙම ක්රියාදාමයහි විනිවිදභාවය සහ ඵලදායිතාව පිළිබඳ බරපතළ ගැටළු මතු වී ඇත.
දූෂණ විරෝධී පනතේ 88(1) වගන්තියට අනුව, වත්කම් ප්රකාශයන් ප්රසිද්ධ කිරීමේදී පහත සඳහන් නිශ්චිත තොරතුරු පමණක් සංස්කරණය මගින් ඉවත් කළ හැකිය.
අ. ප්රකාශකයාගේ හෝ ප්රකාශකයා විසින් ප්රකාශ කරන වත්කම් අයිති තැනැත්තාගේ පදිංචි ලිපිනය.
ආ. ඉඩකඩම් දේපළ පිහිටා ඇති කොට්ඨාසය සහ දිස්ත්රික්කයට අදාළ තොරතුරු හැර ප්රකාශිත ඉඩකඩම් දේපළවල සම්පූර්ණ ලිපිනය/ලිපිනයන්.
ඇ. ප්රකාශනයේ සඳහන් පුද්ගලයන් හඳුනාගැනීම සඳහා භාවිත කළ හැකි උපන් දිනය, ජාතික හැඳුනුම්පත් අංකය, විදේශ ගමන් බලපත්ර අංකය හෝ අදාළ අධිකාරිය විසින් පිළිගත් වෙනත් අංක.
ඈ. බැංකු ගිණුම් අංක; හෝ
ඉ. වෙනත් යම් තැන්පතු විස්තර
මෙම වගන්තිය ඉතා පුළුල් ලෙස අර්ථකථනය කර ගනිමින්, බැංකු ගිණුම් ශේෂයන් සහ දිනයන් වැනි තීරණාත්මක තොරතුරු ඉවත් කිරීම සඳහා අදාළ අධිකාරිය කටයුතු කර ඇත. මෙමගින් වත්කම් ප්රකාශනවලට මහජන ප්රවේශය ලබා දීමේ පරමාර්ථය සම්පූර්ණයෙන්ම නොසලකා හැර ඇති බව පෙනේ.
ඉහත සඳහන් “වෙනත් යම් තැන්පතු විස්තර” යන්න මෙහිදී වැරදි ලෙස අර්ථකථනය කර ගෙන ඇති බව පෙනේ. එම ප්රතිපාදනයේ අරමුණ බැංකු ගිණුම් නොවන ‘වෙනත්’ තැන්පතු වර්ග ඇතුළත් කිරීමයි. බැංකු ගිණුම් ශේෂයන් ඉවත් කිරීමට නීතිය මගින් අදහස් කළේ නම්, 88(1)(ඈ) වගන්තිය මගින්ම ‘බැංකු ගිණුම් ශේෂයන් සහ අංක’ ලෙස දක්වා එය කළ හැකිව තිබුනි.
පනතේ ප්රතිපාදන වලට එලෙස වැරදි අර්ථකථනයක් ලබා දීම වත්කම් ප්රකාශ කිරීමේ ක්රමවේදයේ සහ ඒවාට මහජන ප්රවේශය ලබා දීමේ අරමුණ පරාජය කරයි. මේ ආකාරයෙන් රාජ්ය නිලධාරීන් සහ වගකිවයුතු ආයතන විසින් නීතිය මඟ හැරීම සඳහා සිදුරක් නිර්මාණය කිරීම ගැටළු සහගත වේ. දූෂණ විරෝධී නීතිය ඵලදායී ලෙස ක්රියාත්මක කිරීමට අල්ලස් කොමිසමෙහි ඇති කැපවීම පිළිබඳ අවිශ්වාසයක් මෙමගින් ඇති කරයි.
තවද, දූෂණ විරෝධී පනත අනුව සංස්කරණය කොට ප්රසිද්ධ කර ඇති වත්කම් ප්රකාශන ඉල්ලා සිටින පුද්ගලයන්ගේ අනන්යතාව අල්ලස් කොමිසම මගින් තහවුරු කර ගත යුතු වේ. නම, ජාතික හැඳුනුම්පත් අංකය සහ දුරකථන අංකය ලබා ගැනීම හරහා මෙය සිදු කළ හැකි වුවත්, ඊට අමතරව ඊමේල් ලිපිනය දැක්වීම ද අල්ලස් කොමිසම විසින් අනිවාර්ය කර ඇත. එසේ ඊමේල් ලිපිනය අනිවාර්ය කිරීම අනවශ්ය බව TISL ආයතනයේ හැඟීමයි. එය සැලකිය යුතු පිරිසකට වත්කම් ප්රකාශන වලට ඇති ප්රවේශය සීමා කරන අමතර බාධකයක් ලෙස ගත හැකිය.
ජාත්යන්තර මූල්ය අරමුදල මගින් ද වත්කම් ප්රකාශන ප්රසිද්ධියට පත් කිරීම නිර්දේශ කර තිබූ අතර එය රජය මගින් සකස් කළ ක්රියාකාරී සැලැස්මේ අංගයකි. එහි එක් අරමුණක් නම් රාජ්ය නිලධාරීන් සිදු කළ හැකි අසාධාරණ ලෙස ධනය ඉපැයීම් නිරීක්ෂණය කිරීමට හැකි වන අයුරින් මහජනතාව බලගැන්වීමයි. අනවශ්ය ප්රමාණයට තොරතුරු සංස්කරණය කොට ඉවත් කිරීම හරහා අල්ලස් කොමිසම මෙම අරමුණ යටපත් කරයි.
මෙම ප්රකාශන වලට මහජන ප්රවේශය ලබා දීමේ ක්රියාවලිය අර්ථවත් වීමට නම් ඒවා ප්රසිද්ධ කිරීමට පෙර ඉවත් කරන තොරතුරු පිළිබඳව නැවත සලකා බලන ලෙස TISL ආයතනය අල්ලස් කොමිසමෙන් ඉල්ලා සිටියි. මේ ක්රියාවලියේදී රාජ්ය නිලධාරීන් පුරවැසියන්ට වගවන තත්ත්වයට පත් කර ගැනීම සඳහා අවශ්ය වන වැදගත් තොරතුරු ප්රමාණවත් පරිදි ලබා දීම අත්යවශ්ය වේ. මහජනතාවට ප්රවේශය දී ඇති වත්කම් ප්රකාශයන්හි ඇතුළත් තොරතුරු අපරාධ වලින් උපයාගත් දේපළ සහ ප්රතිලාභී හිමිකරු පිළිබඳ හඳුන්වා දීමට නියමිත නීතින් ක්රියාත්මක කිරීමේදී ඵලදායී ලෙස භාවිතා කිරීම සඳහා ඉහත ක්රියාමාර්ග කඩිනමින් ගැනීම අවශ්ය වේ.
சொத்துப் பிரகடனங்களை பொது மக்களுக்குப் பகிரங்கப்படுத்தும் போது அத்தியாவசிய தகவல்களை நீக்க வேண்டாம் என CIABOC இடம் TISL வலியுறுத்தல்
ஜனாதிபதி உள்ளிட்ட 100 க்கும் அதிகமான உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்கள் தற்பொழுது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) சொத்துப் பிரகடன இணையப்பக்கத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இதனை 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (ACA) கீழ் சொத்துப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்துவதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கட்டமைப்பை நிறுவும் வரையான ஓர் இடைக்கால நடவடிக்கையாகக் கருதமுடியும். வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றாலும், பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்களின் அளவு குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தப் பிரகடனங்களை பகிரங்கப்படுத்தும் போது அதிலுள்ள குறிப்பிடத்தக்க அளவு முக்கியமான தகவல்களை தன்னிச்சையாகவும் தேவையற்ற முறையிலும் நீக்கியுள்ளமை குறித்து TISL நிறுவனம் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. வங்கிக் கணக்கு நிலுவைகள் மற்றும் அந்தக் கணக்குகள் திறக்கப்பட்ட திகதிகள் போன்ற தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த செயல்முறையிலுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் குறித்து கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 88 (1) இன் படி, சொத்துப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்தும் போது பின்வரும் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மாத்திரமே திருத்தம் மூலம் நீக்க முடியும்.
அ. அறிவிப்பாளரின் அல்லது அறிவிப்பாளரால் சொத்துக்கள் அறிவிக்கப்படும் வேறு எந்த நபரின் வசிப்பிட முகவரி.
ஆ. நில உடைமை அமைந்துள்ள தொகுதி மற்றும் மாவட்டம் தொடர்பான தகவல்களைத் தவிர அறிவிக்கப்பட்ட நில உடைமையின் முழு முகவரி/கள்.
இ. பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களை அடையாளம் காணும் நோக்கத்திற்காக பயன்படுத்தும் பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் இலக்கம்.
ஈ. வங்கிக் கணக்கு இலக்கங்கள்; அல்லது
உ. வேறு ஏதேனும் வைப்பு விவரங்கள்
இந்தப் பிரிவை மிகவும் பரந்த அளவில் பொருள்கோடல் செய்து, வங்கிக் கணக்கு நிலுவைகள் மற்றும் திகதிகள் போன்ற முக்கியமான தகவல்களை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சொத்துப் பிரகடனங்களுக்குப் பொதுமக்கள் அணுகலை வழங்குவதன் நோக்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது.
மேலே குறிப்பிட்டுள்ள “வேறு ஏதேனும் வைப்பு விவரங்கள்” என்பது தவறாகப் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. வங்கிக் கணக்குகள் அல்லாத ‘வேறு’ வைப்பு வகைகளைச் சேர்ப்பதே இந்த ஏற்பாட்டின் நோக்கமாகும். வங்கிக் கணக்கு நிலுவைகளை நீக்குவது சட்டத்தின் நோக்கமாக இருந்திருந்தால், 88(1)(ஈ) பிரிவின் மூலம் ‘வங்கிக் கணக்கு நிலுவைகள் மற்றும் இலக்கங்கள்’ எனக் குறிப்பிட்டு அதனைச் செய்திருக்க முடியும்.
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இத்தகைய தவறான பொருள்கோடலை வழங்குவது, சொத்துக்களைப் பிரகடனம் செய்யும் முறைமை மற்றும் அவற்றுக்குப் பொதுமக்கள் அணுகலை வழங்கும் நோக்கத்தை தோற்கடிக்கின்றது. இவ்வாறு, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொறுப்பான நிறுவனங்கள் சட்டத்தை மீறுவதற்கான துளையை உருவாக்குவது சிக்கலாக உள்ளது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அர்ப்பணிப்பு தொடர்பில் இது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
அத்துடன் ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைய, திருத்தப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள சொத்துப் பிரகடனங்களைக் கோரும் நபர்களின் அடையாளத்தை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பெயர், தேசிய அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் இதனை மேற்கொள்ள முடியுமானாலும், அதற்கு மேலதிகமாக மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடுவதையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு மின்னஞ்சல் முகவரியைக் கட்டாயமாக்குவது தேவையற்றது என TISL கருதுகிறது. இதனை, குறிப்பிடத்தக்க நபர்களுக்கு சொத்துப் பிரகடனங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் மேலதிகத் தடையாகக் கொள்ள முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவும் சொத்துப் பிரகடனங்களை பகிரங்கப்படுத்துவதை பரிந்துரை செய்திருந்ததுடன், அது அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசாங்க அதிகாரிகளால் செய்யக்கூடிய நியாயமற்ற வகையில் செல்வம் ஈட்டுவதை கண்காணிப்பதற்கு பொதுமக்களுக்கு அதிகாரம் அளிப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். அவசியமற்ற வகையில் தகவல்களை திருத்தம் செய்து நீக்குவதன் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இந்த நோக்கத்தை அடங்குகின்றது.
இந்தப் பிரகடனங்களுக்கான பொதுமக்கள் அணுகலை வழங்கும் செயன்முறை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர் நீக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு TISL, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றது. இந்தச் செயல்பாட்டில், அரச அதிகாரிகள், பிரஜைகளுக்குப் பொறுப்புக் கூறும் நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான முக்கியமான தகவல்களை போதுமான வகையில் வழங்குவது அத்தியாவசியமாகும். குற்றச் செயல்களால் ஈட்டப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் நலன்பெறும் உரிமையாளர்கள் தொடர்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, பொதுமக்களுக்கு அணுகலை வழங்கியுள்ள சொத்துப் பிரகடனங்களில் உள்ள தகவல்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது அவசியமாகும்.