Skip links

TISL – RTI on Path to Transformational Impact, Challenges Persist

Right to Know Day (28th Sept) has taken on special significance for Sri Lanka since the enactment of the Right to Information (RTI) law which has enabled citizens to ask crucial questions on how we are being governed. To mark Right to Know Day, TISL has launched a complete interactive database of the decisions made by the RTI commission, classified by topic and geographical location, which can now be accessed via www.cd.rtiwatch.lk, our dedicated RTI website.

As we celebrate Right to Know Day, we recognise some of the key milestones of RTI, ranging from citizens receiving redress following RTI requests on corruption within the Vavuniya general hospital to landmark decisions of the RTI Commission on information disclosure by state owned enterprises, such as Sri Lankan Airlines. Looking ahead to October, TISL will be concluding its final submissions before the RTI Commission on accessing the assets declarations of the President and the Prime Minister.

While great strides have been made in using RTI at all levels of public service, be it in the fight against corruption or as a tool to improve public service delivery, citizens continue to encounter resistance and obstacles when exercising this fundamental right. Since the RTI Act came into effect on February 3, 2017, TISL has facilitated the filing of 1,457 RTI applications for the public via the 6 RTI hubs in Ampara, Matara, Vavuniya, Jaffna, Trincomalee and Colombo. Success has varied and at times solutions are provided to citizens, without the information itself being provided. Whilst this has short term benefits, it is essential that information flows are established through RTI to ensure its long-term sustainability.

In addition to training public officials, focus must now be on strict monitoring of implementation as well. In his statement marking International Right to Know Day TISL Executive Director Asoka Obeyesekere stated that “The impact that RTI has had on governance in Sri Lanka cannot be understated. At TISL we encounter the stories of members of the public who have been able to use RTI to great effect. From accessing public services like waste collection to securing land rights and exposing bribery and corruption, RTI has been a success, with the next phase requiring the timely proactive disclosure of information. It is only with sustained commitment that RTI will achieve its transformational potential”.

 

 

 

පරිවර්තනීය වෙනසකට RTI මග පාදයි, තවත් අභියෝග පවතී
මෙවර තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ ජාත්‍යාන්තර දිනය (සැප්තැම්බර් 28) ශ්‍රී ලංකා ජනතාවට විශේෂ වැදගත්කමක් ඇති දිනයක් වී ඇත. තොරතුරු දැනගැනීමේ අයිතිය අප රට තුල සහතික වීමත් සමඟ රටේ පාලන තන්ත්‍රය පිළිබඳව ප්‍රශ්න කිරීමේ හැකියාව ශ්‍රී ලංකා පුරවැසියන්ට හිමිවී ඇත. මෙම දිනය සනිටුහන් කරමින්, මෙවර ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL), තොරතුරු කොමිසමේ සියලු තීන්දු මාතෘකා අනුව වර්ගීකරණය කර www.cd.rtiwatch.lk වෙබ් අඩවියේ එළිදක්වා ඇත.

තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ ජාත්‍යාන්තර දිනය සැමරීමත් සමඟ මෙරට RTI ගමනේ වැදගත් සන්ධිස්ථාන කිහිපයක් සිහි කල යුතුය. වවුනියා මහ රෝහල තුළ සිදුවූ දූෂණය එළිදැක්වීමේ සිට ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම වැනි රාජ්‍ය ව්‍යවසායන් තොරතුරු හෙළි කිරීම පිළිබඳව තොරතුරු කොමිසම ලබා දුන් තීරණය දක්වා දිවෙන මෙවැනි අවස්ථා ගණනාවක් ඇත. එළඹෙන ඔක්තෝම්බර් මාසයේදී, TISL ආයතනය ජනාධිපතිතුමාගේ හා අගමැතිතුමාගේ වත්කම් ප්‍රකාශන ඉල්ලා තොරතුරු කොමිසමට ගොනු කළ අභියාචනාවේ වාචික දේශනා අවසන් කරනු ඇත.

RTI භාවිතය රාජ්‍ය සේවයේ සියලු තලයන්හි දක්නට ලැබෙන අතර, එය දූෂණය පිටුදක්වීමට මෙවලමක් ලෙසත්, පොදු සේවාවන් විධිමත් කිරීම සඳහාද භාවිතා වී ඇත. එහෙත්, මෙම මුලික අයිතිවාසිකම ක්‍රියාත්මක කිරීමේදී පුරවැසියන්ට තවමත් බාධා එල්ල වන බව පැවසිය යුතුය. තොරතුරු පනත 2017 වර්ෂයේ පෙබරවාරි 3 වන දින සිට ක්‍රියාත්මක වූ අතර, එතැන් සිට අද දක්වා, අම්පාර, මාතර, වවුනියාව, යාපනය, ත්‍රිකුණාමලය හා කොළඹ පිහිටුවා ඇති RTI කේන්ද්‍රයන් හරහා ජනතාව වෙනුවෙන් RTI ඉල්ලුම් පත්‍ර 1457 ගොනු කිරීමට TISL ආයතනය උපකාරී වී ඇත. මෙම වෑයමේ සාර්ථකත්වය විවිධාකාරව අර්ථනිරුපනය කළ හැකි අතර, තොරතුරු ලබා නොදී ජනතාවගේ ප්‍රශ්න විසඳා ඇති අවස්ථාවන්ද එමටය. මෙහිදී කෙටි කාලීන ප්‍රතිලාභයන් ලබා ගත හැකි වුවද තොරතුරු නීතියේ දිගු කාලීන පැවැත්ම සඳහා තොරතුරු ලබා ගැනීමේ පහසුව තහවුරු විය යුතුය.

රජයේ නිලධාරීන් පුහුණු කිරීමට අමතරව ඉදිරියේදී තොරතුරු අයිතිය ක්‍රියාත්මක කරන ආකාරය අධීක්ෂණය කිරීම පිළිබඳව අදාල බලධාරීන්ගේ දැඩි අවධානය යොමු විය යුතුය.

“ශ්‍රී ලංකාවේ පාලන තන්ත්‍රයට තොරතුරු නීතියෙන් සිදුවී ඇති බලපෑම කිසිසේත්ම අවප්‍රමාණය කළ නොහැක. තමන්ගේ තොරතුරු දන ගැනීමේ අයිතිය මනා ලෙස පුරවැසියන් විසින් භාවිතා කිරීම, අප ආයතනය විසින් නිතර නිරීක්ෂණය කර ඇති කාරණයකි. කසළ එකතු කිරීම වැනි පොදු සේවාවන් විධිමත් කිරීමේ සිට ඉඩම් අයිතිය තහවුරු කිරීම හා අල්ලස හා දූෂණය හෙළි කිරීම දක්වා, තොරතුරු නීතිය ඉතා සාර්ථකව භාවිතාවී ඇත. RTI හි පරිවර්තනීය වෙනසක් සිදු කිරීමට ඇති විභවය යථාර්තයක් කිරීම සඳහා ප්‍රගාමී හෙළිදරව්ව ප්‍රයෝගික යතාර්ථයක් විය යුතුය.” තොරතුරු දැන ගැනීමේ අයිතියේ දිනය වෙනුවෙන් පණිවුඩයක් නිකුත් කරමින්, TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂ අසෝක ඔබේසේකර මහතා පවසා සිටියේය.

சவால்களுக்கு மத்தியில் முழுமையான மாற்றத்தை நோக்கி RTI
சர்வதேச தகவல் அறியும் தினமானது இம்முறை இலங்கை மக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தினமாகும். தகவல் அறியும் உரிமை எமது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டதோடு நாட்டின் ஆளுகை தொடர்பாக கேள்வியெழுப்பும் அதிகாரத்தையும் இது மக்களுக்கு வழங்கியுள்ளது. சர்வதேச தகவல் அறியும் தினத்தை குறிப்பிடுகையில், இம்முறை ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் (TISL) , தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட சகல தீர்ப்புக்களை உள்ளடக்கிய, குறிப்பிட்ட தலைப்புக்கள், RTI விண்ணப்பங்கள் உள்ளடக்கிய பிரதேசம் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையிலமைந்த தரவுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த தரவுத்தளத்தினை www.cd.rtiwatch.lk இணைத்தளத்தினூடாக பார்வையிடலாம்.

சர்வதேச தகவல் அறியும் தினத்தை கொண்டாடும் அதேநேரம் எமது RTI பயணத்தில் மைல்கற்களாக அமைந்த சில நிகழ்வுகளையும் நினைவுகூறவேண்டியது அவசியமாகின்றது. வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழலை வெளிப்படுத்தியது முதல் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் போன்ற பொது நிறுவனங்களின் தகவல்களை வெளிப்படுத்தல் தொடர்பாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்புக்கள் வரை அவ்வாறான சந்தர்ப்பங்களை குறிப்பிடலாம்.

அரச சேவையின் சகல மட்டங்களிலும் தகவல் அறியும் உரிமையை பார்க்கின்ற அதேநேரம், ஊழலை ஒழிப்பதற்கான ஒரு கருவியாகவும், அதேநேரம் அரச சேவையை செயற்றிறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அடிப்படை உரிமையை நடைமுறையில் பயன்படுத்துகையில் பொதுமக்களுக்கு பல தடைகள் உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. RTI சட்டம் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அன்றிலிருந்து இன்றுவரை, அம்பாறை, மாத்தறை, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள RTI மத்திய நிலையங்களினூடாக RTI விண்ணப்பங்கள் 1457 ஐ சமர்ப்பிப்பதற்கு பொதுமக்களுக்கான TISL நிறுவனம் உதவியுள்ளது. இந்த வெற்றியை பல்வேறு வடிவங்களில் நோக்க முடியும் என்பதோடு, தகவல்களை வழங்காது மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெறப்பட்ட சந்தர்ப்பங்களையும் குறிப்பிடலாம். இதனூடாக குறுகியகால பலன்கள் பெறப்பட்டதோடு RTI சட்டத்தின் நீண்டகால நிலைப்படுத்தலின் தேவை கருதி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அரச அதிகாரிகளை பயிற்றுவிப்பது மட்டுமன்றி எதிர்காலத்தில் தகவல் அறியும் உரிமையை எவ்வாறு சிறப்பாக செயற்படுத்த முடியும் என்பது தொடர்பாகவும் குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர அவர்கள் ‘இலங்கையின் அரசியல் அழுத்தங்களினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதிகாரத்தை ஒருபோதும் குறைத்துவிட முடியாது. தங்களது தகவல் அறிந்துகொள்வதற்கான உரிமையை பொதுமக்கள் எந்தளவு பயன்படுத்தியள்ளார்கள் என்பதை நாம் கண்கூடாக அவதானித்துள்ளோம். கழிவுகளை அகற்றுதல் போன்ற பொது சேவைகளை செயற்றிறன் மிக்கதாக மாற்றியது முதல் காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊழலை வெளிப்படுத்துவது வரையில் RTI சட்டம் மிகம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. RTI ஐ மேலும் குறிப்பிடத்தக்கவகையில் யதார்தத்திற்குட்படுத்துவதற்கு பொது அதிகாரசபைகளின் தாமாக வெளிப்படுத்தும் தகவல்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.