இலங்கை மக்கள் என்ற வகையில் திறந்த அரச கூட்டுப்பொறுப்பு பற்றிய தேசிய செயட்பாட்டுத் திட்டத்தின் முடிவுகளின் இறுதி பயனாளிகள் நீங்களேயாகும். எனவே கீழ் காணப்படும் இலங்கையின் திறந்த அரச கூட்டுப்பொறுப்பு வரைபில் காட்டப்பட்டுள்ள பொறுப்புக்களை வலுவூட்டுவதற்கான உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை நாம் வரவேற்கின்றோம். அமைச்சரவையின் அனுமதிக்காக இவ் வரைபை முன்வைக்க முன் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன் வைக்க வேண்டும்.
திறந்த அரச கூட்டுப்பொறுப்பு என்பதானது தமது அரசாங்கம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு மிகவும் வெளிப்படையாக பொறுப்புடன் கூடிய மற்றும் பதில் கூறும் ஓர் அரசாங்கம் ஒன்றாக மாறுவதற்காக அர்ப்பணமாகும். உள்ளூர் மறுசீரமைப்பாளர்களுக்கான சர்வதேச மேடையாகும். அதன் நிமிர்த்தம் ஒன்று சேருமாறு கிடைத்த அழைப்பின் அடிப்படையில் 2015 ஒக்டோபர் மாதத்தில் இலங்கை அதன் அறிக்கையில் கைச்சாத்திட்டது. அவ்வாறு அதற்கு அழைப்பு பெற்ற ஒரே ஒரு தெற்காசிய நாடு இலங்கை ஆகும்.
பிரதேச செயலாளர்கள் உதவியுடன் 2016 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒன்பது மாகாணங்களிலும் மேற்கொண்ட மக்கள் அபிப்பிராயம் கோரித் தகவல் சேகரிக்கப்பட்டது. அது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் திறந்த அரசு கூட்டுச் செயற்பாடு சிவில் சமூக இணைப்பாளர் (ட்ரான்ஸ்பரன்சி இன்டெர்னஷனல் இலங்கை நிறுவன அனுசரணையுடன் ) குழு ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் மூலமே அது அமுல்படுத்தப்பட்டது.சிவில் சமூக செயற்பாட்டு கமிட்டி மூலம் ஆரம்பித்து தொகுக்கப்பட்டுள்ளது.
கல்வி
மாகாணங்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளை வலுவூட்டுவதற்கான உரிமையை அடிப்படையாக கொண்ட சமூக கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளை வலுவூட்டல்.
தகவல் தொழில்நுட்பம்
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குபவர்களாக சகலரையும் உள்ளடக்கி வெளிப்படை பொறுப்புடன் கூடிய பயனுள்ள ஆட்சி ஒன்றிற்கான அரச தகவல் நிலைய சேவைகளை மேம்படுத்தல்.
- திறந்த தரவுகள் எண்ணக்கருவிருத்தி செய்தல் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மூலம் அதன் முடிவுகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுத்தல்
பெண்கள்
- பெண்களுக்கு எதிரான சகல விதமான முறையற்ற உபசரிப்புக்களை நிராகரிபதற்கான உடன்பாட்டின் இறுதி சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கான வெளிப்படைத்தன்மையுடனான பொறுப்புக்கூறலிற்கு உட்பட்ட பொறிமுறை ஒன்றை வழங்குதல்.
- அரசியலில் பெண்கள் பங்குபெறுதலை பயனுள்ளவாறு அமுல் செய்வதனை உறுதிசெய்தல்.
சுகாதாரம்
- பேணுதலாக மற்றும் அனைவராலும் தாங்க கூடிய விலைக்கு அவடதங்களை பேரருட் கொள்ளக்கூடிய விலையிலான கொள்கையை பயனுள்ளதாக அமுல்படுத்துவதனை உறுதி செய்தல்.
- திறனாய்வு உற்பத்தி திறன் மற்றும் நியாயத்தை விசேட இலக்காகக்கொண்டு பூரண தேசிய செயலணி தரவு நிலையம் ஒன்றை உருவாக்குதல்.
- இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மூலகங்களுடன் உருவாகும் சிறுநீரக நோயை தவிர்க்கும் முகமாக வெளிப்படையான பங்களிப்பு பொறிமுறை ஒன்றை செலயப்படுத்திடுவதனை உறுதி செய்தல்.
வளங்கள் மற்றும் உள்ளுராட்சி
- உள்ளுராட்சி நிறுவனங்களுக்கென வெளிப்படையான பொறுப்புடனான மற்றும் பங்குகொள்ளல் வழங்கல்கள் ஒண்றினை நிறுவுதல்.
சுற்றாடல்
- அடைப்படை சுற்றாடல் விசாரணைகளின் போது மக்களின் கருத்து கூறலிற்கான உரிமையை மீளமைப்பதன் மூலம் சுரண்டல் சம்மந்தப்பட்ட தீர்மானங்களின் போது வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல்.
- காலநிலை விபரீதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் உடன்பாட்டிற்கு அமைவான முறையில் இலங்கையின் ஒப்புதல் திட்டத்தினை செயற்படுத்துவதற்காக வெளிப்படை தன்மை ,பொறுப்புடனான மற்றும் கலந்துகொள்ளல் பொறிமுறை அமுலில் உள்ளது என்பதை உறுதிசெய்தல்.
தகவல் அறியும் உரிமை (RTI)
- தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டம் பயனுள்ளதாக அமுலில் உள்ளது என்பதை உறுதி செய்தல்.
ஊழல்
- ஊழலை தடுக்கும் பொறிமுறையை மேம்படுத்துதல், முகவர் நிறுவனங்கள் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ள பொறுப்புகளை உள்ளடக்குவதற்கான ஊழல் ஒழிப்பு முறையை வலுவூட்டல்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருத்தங்களிற்கான உங்களது பதில்களை ஜூலை மாதம் 28 ம் திகதி கு முன் கீழ்வரும் விலாசத்திற்கு சமர்ப்பிக்கவும்.
Ministry of Foreign Affairs – E: ogp@mfa.gov.lk Tel: 011 2325371 Fax: 011 2446091 (Attn OGP)
OGP Civil Society Coordinating Team – E: ogp@tisrilanka.org Tel: 011 4369781 (Ext 203) Fax: 011 2501707 (Attn OGP)