Civil society organizations (CSOs) engaged in the co-creation of third National Action Plan have collectively decided to withdraw from the Open Government Partnership (OGP) in Sri Lanka to express their opposition to the recent actions of the Government, specifically the purported passage of the Online Safety Act and attempts to introduce a draconian anti-terrorism law despite widespread public resistance. CSOs are concerned that these actions of the Government are aimed at suppressing the civic space and fundamental freedoms of the people, and therefore clearly contradict the fundamental principles of the OGP.
As the co-convenors of the CSOs in the OGP process in Sri Lanka, Transparency International Sri Lanka (TISL) and Sarvodaya Shramadana Movement, we wrote to the President today to officially inform him of this collective decision.
Background information:
The Open Government Partnership (OGP) is a multi-stakeholder initiative focused on improving government transparency, ensuring opportunities for citizen participation in public matters, and strengthening mechanisms for public accountability.
More than 70 countries, a growing number of local governments and thousands of civil society organizations are members of OGP. Under the OGP, all participating countries are required to develop a two-year National Action Plan through a multi-stakeholder process to implement governance initiatives in prioritized sectors in collaboration with civil society.
Since 2015, Sri Lanka has been internationally committed through its membership in the OGP. Since then, two National Action Plans have been prepared, but the implementation faced various challenges.
සිවිල් අවකාශය හකුලන පීඩාකාරී සහ ප්රජාතන්ත්රවිරෝධී නීතිවලට විරෝධය පළ කරමින් ශ්රී ලංකාවේ විවෘත රාජ්ය හවුල්කාරිත්ව (OGP) ක්රියාවලියට සම්බන්ධ සිවිල් සමාජ සංවිධාන එම ක්රියාවලියෙන් ඉවත් වේ.
ශ්රී ලංකාවේ විවෘත රාජ්ය හවුල්කාරිත්ව (OGP) වැඩසටහනට අදාළව තුන්වන ජාතික ක්රියාකාරී සැලැස්ම සකස් කිරීමට දායකවෙමින් සිටි සිවිල් සමාජ සංවිධාන (CSOs) ඉන් ඉවත් වීමට සාමූහිකව තීරණය කර ඇත. ඒ මාර්ගගත ක්රමවල සුරක්ෂිතතාව පිළිබඳ පනත (Online Safety Act) සම්මත කිරීම සහ පුළුල් මහජන ප්රතිරෝධය නොතකා මර්දනකාරී වගන්ති ඇතුළත් ත්රස්ත විරෝධී නීතියක් හඳුන්වා දීමට උත්සාහ කිරීම වැනි ආණ්ඩුවේ මෑත කාලීන ක්රියාමාර්ග වලට විරෝධය ප්රකාශ කිරීමක් ලෙසයි. සිවිල් අවකාශය මෙන්ම ජනතාවගේ මූලික නිදහස අවහිර කරන රජයේ මෙවැනි ක්රියාමාර්ග පැහැදිලිවම OGP මූලධර්ම උල්ලංඝනය කිරීමක් වේ.
ශ්රී ලංකාවේ OGP ක්රියාවලියට සම්බන්ධ සිවිල් සමාජ සංවිධානවල සම කැඳවුම්කරුවන් වශයෙන් කටයුතු කරන ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය (TISL) සහ සර්වෝදය ශ්රමදාන ව්යාපාරය මෙම සාමූහික තීරණය ජනාධිපතිවරයා වෙත අද නිල වශයෙන් දැනුම් දෙන ලදී.
පසුබිම් තොරතුරු:
විවෘත රාජ්ය හවුල්කාරිත්වය (OGP) යනු රජයේ විනිවිදභාවය ඉහළ නැංවීම, පොදු ගැටළු සඳහා පුරවැසියන්ගේ සහභාගීත්වය සහතික කිරීම සහ මහජන වගවීම සඳහා යාන්ත්රණයන් ශක්තිමත් කිරීම කෙරෙහි අවධානය යොමු කරන බහුපාර්ශ්වීය වැඩසටහනකි.
මේ වන විට රටවල් 70කට වඩා වැඩි ගණනක් මෙන්ම තවත් පළාත් පාලන ඒකක රැසක් විවෘත රාජ්ය හවුල්කාරිත්වයෙහි සාමාජිකත්වය දරයි. සිවිල් සමාජ සංවිධාන දහස් ගණනකගේ දායකත්වය ද මෙයට ලැබේ. OGP ක්රියාවලියට සහභාගී වන සියලුම රටවල් තෝරාගත් ක්ෂේත්ර තුළ යහපාලනය ඇති කිරීම පිණිස වසර දෙකකට අදාළ වන පරිදි ජාතික ක්රියාකාරී සැලැස්මක් සිවිල් සමාජයේ සහභාගීත්වය සහිතව සම්පාදනය කළ යුතු වෙයි.
2015 වසරේ ශ්රී ලංකාව OGPහි සාමාජිකත්වය ගනිමින් එම ක්රියාවලිය සඳහා ජාත්යන්තර බැඳීමක් ඇති කර ගන්නා ලදී. එතැන් සිට ජාතික ක්රියාකාරී සැලසුම් දෙකක් සකස් වූ නමුත්, ඒවා ඉදිරියට ගෙන යෑමේදී විවිධ අභියෝග වලට මුහුණ දුනි.
சிவில் சமூக வெளியை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) செயல்முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகல்
இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தின் (NAP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புக்கள் (CSOs) சிவில் கூட்டு முயற்சிகளிலிருந்து விலகுவதற்காக ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. இது அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள், குறிப்பாக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் பரவலான எதிர்ப்பையும் மீறி பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், சிவில் சமூக வெளியை அடக்குவதற்கும், பொது மக்களின் அடிப்படை சுதந்திர மீறலுக்கும் எதிராக இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிட்கு எம்மை நிர்ப்பந்தித்துள்ளன. இந்த முடிவானது குழுவாக தீர்க்கமான முறையில் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆபத்தான முன்னெடுப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்டது.
இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) சிவில் சமூக அமைப்புகளின் இணைப்பாளர்கள் என்ற வகையில், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) மற்றும் சர்வோதய ஷ்ரமதான இயக்கம் இந்த கூட்டு முடிவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளோம்.
பின்னணி தகவல்:
திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) என்பது அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், பொது பிரச்சினைகளில் பொது மக்களின் பங்களிப்பை உறுதி செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல பங்குதாரர்களின் முயற்சியாகும்.
தற்போது, 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பெருகிவரும் உள்ளூர் அரசாங்கங்கள்-இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புக்கள் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) உறுப்பினர்களாக உள்ளன. திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) கீழ், சிவில் சமூகத்துடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் நல்லாட்சிக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கு, பங்குபெறும் அனைத்து நாடுகளும் பல பங்குதாரர்கள் செயல்முறையின் மூலம் இரண்டு ஆண்டு தேசிய செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
இலங்கை 2015 முதல் திறந்த அரசாங்க பங்குடைமையில் (OGP) அங்கத்துவம் பெறுவதன் மூலம் சர்வதேச ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதன் பின்னர், இரண்டு தேசிய செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன, ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.