In a landmark judgment the Supreme Court today (July 24) delivered its judgment in Fundamental Rights petitions in relation to the X-Press Pearl maritime disaster, one of the worst environmental disasters in Sri Lanka’s history.
TISL filed the intervention petition to intervene in case no. SC/FR 168/2021, filed by the Centre for Environmental Justice seeking fair compensation for the victims of the X-Press Pearl disaster. TISL intervened in the public interest citing grave lapses in the discharge of public duties by relevant authorities in the leading up to and handling of the disaster. TISL raised critical questions on accountability for the systemic governance failures that enabled the scale of the disaster and hindered timely and transparent response and compensation.
The Supreme Court held the Master, Operators, and local Agent of MV X-Press Pearl, and the X-Press Pearl Group responsible for causing preventable environmental disaster. The Court held then State Minister for Urban Development, the Attorney General, the Marine Environment Protection Authority (MEPA) and its Chairperson, accountable for the violation of Article 12(1) of the Constitution.
Declarations of Fundamental Rights Violations:
- The former State Minister for Urban Development violated Article 12(1) by failing to constitute the Marine Environment Council and to supervise MEPA, resulting in an unsupervised response to the X-Press Pearl disaster.
- The MEPA infringed Article 12(1) by failing to respond effectively to the incident and failing to comply with its statutory obligations under the Marine Pollution Prevention Act.
- The Chairperson of MEPA, infringed Article 12(1) by failing to discharge her statutory responsibilities and respond effectively to the X-Press Pearl incident.
- The Attorney General infringed Article 12(1) by failing to indict the Owner and Operators of MV X-Press Pearl under Section 26(a) of the Marine Pollution Prevention Act.
- The Attorney General also infringed Article 12(1) by unreasonably, irrationally, and arbitrarily instituting civil action in Singapore, rather than pursuing proceedings in the High Court of Sri Lanka exercising Admiralty jurisdiction — a decision deemed not in the national interest.
Significant Orders Made:
- The X-Press Pearl group must pay USD 1 billion in initial compensation to the Treasury within one year, with the first instalment due by 23 September 2025. Further compensation payments may be ordered by the Court in due course.
- The local Agent Sea Consortium Lanka (Pvt.) Ltd. must submit an affidavit naming all directors and key officers involved in matters related to the X-Press Pearl as of 2 June 2021.
- The Director General of CIABOC must conduct a fresh bribery and corruption investigation, coordinate with intelligence agencies, and inter alia, look into the speeches made in Parliament pertaining to the disaster.
- The Court established a Compensation Commission to oversee reparations.
- The Court established a Marine and Coastal Restoration Committee to lead environmental recovery.
- The Attorney General must complete investigations, pursue prosecutions, report to the Court every three months, and lead legislative reform to ensure Sri Lankan maritime pollution laws are aligned with international standards.
TISL welcomes the Supreme Court’s landmark decision to hold both state officials and corporate actors accountable for their roles in one of the worst environmental disasters in Sri Lanka’s history. The judgment underscores the critical need for transparency, institutional and corporate accountability, and stronger enforcement of legal obligations to prevent future environmental harm, governance failures, and corruption.
The case was heard before a five-judge bench comprised of Chief Justice Hon. Murdu N.B. Fernando, PC, Hon. Yasantha Kodagoda, PC, Hon. A. L. Shiran Gooneratne, Hon. Achala Wengappuli, And Hon. K. Priyantha Fernando.
Senior Counsel Mr. Senany Dayaratne with Ms. Nishadi Wickremasinghe, Ms. Maheshika Bandara, Mr. Adithya Karalliadee and Ms. Janani Abeywickrema instructed by Ms. Thushari Jayawardena appeared for TISL.
TISL remains steadfast in its commitment to shining a light on issues of transparency and accountability and will continue to play an active role in ensuring that this significant decision of the Supreme Court is effectively implemented.
Full judgement: https://supremecourt.lk/?melsta_doc_download=1&doc_id=3b6f6e7b-53d9-4c75-8428-e27159491296&filename=sc_fr_168_176_184_277_2021.pdf
X-Press Pearl සමුද්රීය ව්යසනය සහ එහි කළමනාකරණය සම්බන්ධයෙන් රාජ්ය සහ පෞද්ගලික පාර්ශවයන් වගකිව යුතු බවට ශ්රේෂ්ඨාධිකරණය තීන්දු කරයි
ශ්රී ලාංකේය ඉතිහාසයේ විශාලතම පාරිසරික ව්යසනය වන X-Press Pearl සම්බන්ධයෙන් ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා (TISL) ආයතනය විසින් ගොනු කරන ලද මූලික අයිතිවාසිකම් පෙත්සම පිලිබඳ ශ්රේෂ්ඨාධිකරණ තීන්දුව අද (ජූලි 24) දින ලබා දෙන ලදි.
X-Press Pearl ව්යසනයේ වින්දිතයින්ට සාධාරණ වන්දි ඉල්ලා පාරිසරික යුක්ති කේන්ද්රය (Centre for Environmental Justice) විසින් ගොනු කරන ලද SC/FR/168/2021 නඩුව සම්බන්ධයෙන් මැදිහත්වීමේ පෙත්සමක් ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය විසින් ගොනු කරන ලදී. ව්යසනය සහ එහි කළමනාකරණයේදී අදාළ බලධාරීන් විසින් රාජකාරි ඉටු කිරීමේදී බරපතල අඩුපාඩු සිදුවී ඇති බව සඳහන් කරමින් TISL ආයතනය මහජන සුබසිද්ධිය වෙනුවෙන් එසේ මැදිහත් වීය. ව්යසනයේ පරිමාණයට සහ කාලෝචිත හා විනිවිදභාවයෙන් යුතු ප්රතිචාර දැක්වීමට සහ වන්දි ගෙවීමට බාධා කළ රාජ්යකරණයේ අසාර්ථකත්වයන් සඳහා වගවීම පිළිබඳව ගැටළු මතුවන බව TISL අවධාරණය කළේය.
ශ්රේෂ්ඨාධිකරණය විසින් MV X-Press Pearl නෞකාවේ මාස්ටර්, මෙහෙයුම්කරුවන්, දේශීය නියෝජිතයා සහ X-Press Pearl සමූහය, වැළැක්විය හැකි පාරිසරික විනාශයකට වගකිවිය යුතු බව තීන්දු කළේය. එසේම, හිටපු නාගරික සංවර්ධනය පිළිබඳ රාජ්ය අමාත්යවරයා, නීතිපතිවරයා, සමුද්රීය පරිසර ආරක්ෂණ අධිකාරිය (MEPA) සහ එහි සභාපති යන වගඋත්තරකරුවන් ව්යවස්ථාවේ 12(1) වගන්තිය උල්ලංඝනය කර ඇති බවට අධිකරණය තීන්දු කරන ලදි.
මූලික අයිතිවාසිකම් උල්ලංඝනය වී ඇති බවට කල තීන්දු ප්රකාශයන්:
- හිටපු නාගරික සංවර්ධනය පිළිබඳ රාජ්ය අමාත්යවරයා සමුද්ර පරිසර සභාව පිහිටුවීමට සහ MEPA අධීක්ෂණය කිරීමට අපොහොසත් වීමෙන් 12(1) වගන්තිය උල්ලංඝනය කළ ඇති අතර, එහි ප්රතිඵලයක් ලෙස X-Press Pearl ව්යසනයට අධීක්ෂණයකින් තොරව ප්රතිචාර දැක්වීමට සිදුවිය.
- MEPA විසින් සිදුවූ අනතුරට සාර්ථක ලෙස ප්රතිචාර නොදක්වා, සාගර දූෂණ වැළැක්වීමේ පනත යටතේ ඇති නීතිමය වගකීම් නොපිළිපැදීම මඟින් ව්යවස්ථාවේ 12(1) වගන්තිය උල්ලංඝනය කර ඇත.
- MEPA සභාපති විසින් තම නීතිමය වගකීම් ඉටු නොකරමින් X-Press Pearl අනතුරට සාර්ථක ලෙස ප්රතිචාර දැක්වීම අසමත් වීමෙන් ව්යවස්ථාවේ 12(1) වගන්තිය උල්ලංඝනය කර ඇත.
- නීතිපති විසින් සාගර දූෂණ වැළැක්වීමේ පනතේ 26(අ) වගන්තිය යටතේ MV X-Press Pearl හි හිමිකරු සහ මෙහෙයුම්කරුවන්ට චෝදනා ඉදිරිපත් කිරීමට අසමත් වීම මඟින් ව්යවස්ථාවේ 12(1) වගන්තිය උල්ලංඝනය කර ඇත.
- නීතිපතිවරයා විසින් ශ්රී ලංකාවේ මහාධිකරණයේ අද්මිරාල් අධිකරණ බලය යටතේ නඩු පැවරීමේ හැකියාව පැවතියදී, අහේතුක, යුක්ති සහගත නොවන, සහ අත්තනෝමතික ලෙස සිිංගප්පූරුවේ සිවිල් නඩු ක්රියාමාර්ග ආරම්භ කිරීම මඟින් ව්යවස්ථාවේ 12(1) වගන්තිය උල්ලංඝනය කළ අතර, මෙම තීරණය ජාතික සුභසිද්ධියට අනුකූල නොවන බව අධිකරණය සලකා ඇත.
ශ්රේෂ්ඨාධිකරණය විසින් ලබා දුන් ප්රධාන නියෝග:
- X-Press Pearl සමූහය වසරකට අතුළත මුල් වන්දි ලෙස ඇමරිකානු ඩොලර් බිලියනයක් (USD 1 Billion) ශ්රී ලංකා මහභාණ්ඩාගාරයට ගෙවිය යුතු අතර, මුල් වාරිකය 2025 සැප්තැම්බර් 23 වනදාට පෙර ගෙවිය යුතුය. අධිකරණය විසින් අවශ්ය පරිදි අමතර වන්දි ගෙවීම් නියෝග කළ හැකිය.
- දේශීය නියෝජිතයා වූ Sea Consortium Lanka (Pvt.) Ltd. සමාගම විසින්, 2021 ජූනි 2 වන දින සිට X-Press Pearl හි අදාළ කටයුතුවලට සම්බන්ධ සියලුම අධ්යක්ෂවරුන් සහ ප්රධාන නිළධාරීන් නම් කරමින් දිවුරුම් ප්රකාශයක් ඉදිරිපත් කළ යුතුය.
- අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ (CIABOC) අධ්යක්ෂ ජනරාල්වරයා විසින් නව දූෂණ විමර්ශනයක් පැවැත්විය යුතු අතර, බුද්ධි අංශ සමඟ සම්බන්ධීකරණයකින් යුතුව, මෙම ව්යසනය සම්බන්ධයෙන් පාර්ලිමේන්තුවේදී සිදු කරන ලද ප්රකාශ පිළිබඳව සොයා බැලිය යුතුය.
- හානිපූරණය අධීක්ෂණය කිරීම සඳහා අධිකරණය විසින් විශේෂ වන්දි කොමිසමක් පිහිටුවන ලදි.
- අධිකරණය විසින් පාරිසරික ප්රතිසාධනය සඳහා සමුද්ර හා වෙරළබඩ ප්රතිසංස්කරණ කමිටුවක් පිහිටුවන ලදි.
- නීතිපතිවරයා විසින් විමර්ශන සම්පූර්ණ කර, නඩු පවරා, සෑම මාස තුනකට වරක් අධිකරණයට වාර්තා කළ යුතු අතර, ශ්රී ලංකාවේ සමුද්ර දූෂණ නීති ජාත්යන්තර ප්රමිතීන්ට අනුකූල වන බව සහතික කිරීම සඳහා නීති ප්රතිසංස්කරණ මෙහෙයවිය යුතුය.
ශ්රී ලංකා ඉතිහාසයේ විශාලතම පාරිසරික ව්යසනයකට සම්බන්ධ වූ රාජ්ය නිලධාරීන්ට්, පෞද්ගලික සමාගම් නියෝජිතයින්ට වගකීම පැවරීම පිළිබඳ ශ්රේෂ්ඨාධිකරණය ලබාදුන් මෙම අයිතිහාසික තීන්දුව TISL ආයතනය සාදරයෙන් පිළිගනී. ඒ සමගම මෙම තීන්දුව මගින් විනිවිදභාවය, ආයතනික සහ පෞද්ගලික අංශයේ වගකීම, හා අනාගත පාරිසරික හානියන්, රාජ්යකරණයේ අසාර්ථකත්වයන් සහ දූෂණ වැළැක්වීම සඳහා නීතිමය වගකීම් දැඩි ලෙස ක්රියාත්මක කිරීමේ අවශ්යතාවය TISL ආයතනය මේ සමගම අවධාරණය කර සිටියි.
අගවිනිසුරු ජනාධිපති නීතිඥ මුර්දු එන්.බී ප්රනාන්දු ගේ සභාපතිත්වයෙන්, ජනාධිපති නීතිඥ යසන්ත කෝදාගොඩ, ඒ. එල්. ශිරාන් ගුණරත්න, අචල වෙන්ගප්පුලි සහ කේ. ප්රියන්ත ප්රනාන්දු යන විනිසුරුවරුන්ගෙන් සමන්විත ජ්යෙෂ්ඨ පංච පුද්ගල විනිසුරු මඩුල්ලක් හමුවේ මෙම නඩුව විභාගයට ගැනිණි.
විනිවිදභාවය සහ වගවීම සම්බන්ධ ගැටළු පිළිබඳව ජාතියේ අවධානය යොමු කිරීමට TISL තවදුරටත් කැපවී සිටී. ශ්රේෂ්ඨාධිකරණයේ මෙම වැදගත් තීන්දුව ප්රායෝගිකව, නිසිලෙස ක්රියාත්මක වන බව සහතික කිරීම සඳහා ද TISL ක්රියාශීලීව, ඉදිරියටත් පියවර ගනු ඇත.
පෙත්සම්කරුවන් වෙනුවෙන් ජ්යෙෂ්ඨ නීතිඥ සේනානි දයාරත්න මහතා, නීතිඥ නිශාදි වික්රමසිංහ මහත්මිය, නීතිඥ මහේෂිකා බණ්ඩාර මහත්මිය, නීතිඥ ආදිත්ය කරලියද්ද මහතා සහ නීතිඥ ජනනි අබේවික්රම මහත්මිය, ලේඛනගත නීතිඥ තුෂාරි ජයවර්ධන මහත්මියගේ උපදෙස් මත TISL වෙනුවෙන් පෙනී සිටියාය.
සම්පුර්ණ නඩු තීන්දුව : https://supremecourt.lk/?melsta_doc_download=1&doc_id=3b6f6e7b-53d9-4c75-8428-e27159491296&filename=sc_fr_168_176_184_277_2021.pdf
X-Press Pearl பேரழிவுக்கு அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களும் பொறுப்பு: உயர் நீதிமன்றத் தீர்ப்பு
X-Press Pearl பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நட்டஈட்டைப் பெற்றுத் தரவேண்டும் என வலியுறுத்தி, சுற்றாடல் நீதிக்கான நிலையம் தாக்கல் செய்த SC/FR 168/2021 ஆம் இலக்க வழக்கில், TISL தனது பொது நல விருப்பத்தின் அடிப்படையில் தலையீடு செய்யும் வகையில் ஒரு தலையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
பேரழிவிற்கு முன்னரும், அதன் போதும், பின்னரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பொதுக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்காகவே, TISL பொது நலன் கருதி இந்த வழக்கில் தலையீடு செய்தது. இந்த குறைபாடுகள் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் பொது சுகாதாரத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியன. TISL தாக்கல் செய்த மனுவில், பேரழிவின் அளவை அதிகரிக்கச் செய்த மற்றும் சரியான நேரத்தில், வெளிப்படையாக பதிலளிக்கவும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தடையாக இருந்த முறைமைசார்ந்த பரிபாலனத் தோல்விகளுக்குப் பொறுப்புக்கூறல் கோரப்பட்டது. மேலும், X-Press Pearl பேரழிவைத் தொடர்ந்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமையைச் சுற்றி பல முக்கிய கவலைகளை TISL தனது தலையீட்டு மனுவில் முன்வைத்தது.
உயர்நீதிமன்றம் தெரிவித்ததாவது, MV X-Press Pearl கப்பலின் மாஸ்டர், ஆபரேட்டர்கள், உள்ளூர் முகவர் மற்றும் X-Press Pearl குழுவினர் தடுக்கக்கூடிய ஒரு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியதற்குப் பிரதானமாகப் பொறுப்பாளிகள் எனக் கருதப்படுகின்றனர். மேலும், அரசியலமைப்பின் பிரிவு 12(1) மீறப்பட்டுள்ளதாகவும், அதற்காக முன்னாள் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர், சட்டமா அதிபர், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் அதன் தலைவர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல்கள் குறித்து உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கைகள்:
- முன்னாள் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர், கடல்சார் சூழல் பேரவையை நிறுவத் தவறியதாலும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையை (MEPA) மேற்பார்வையிடத் தவறியதாலும், X-Press Pearl பேரழிவுக்கான கட்டுப்பாடற்ற எதிர்வினையை ஏற்படுத்தியது. இதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 12(1) ஐ மீறியுள்ளார்.
- (MEPA) கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது சம்பவத்தின் போது திறம்பட செயற்பட தவறியதாலும், கடல்சார் சுற்றாடல் மாசடைதல் தடுப்புச் சட்டத்தின் (Marine Pollution Prevention Act) கீழ் அதன் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்கத் தவறியதாலும், அரசியலமைப்பின் பிரிவு 12(1) ஐ மீறியுள்ளது.
- (MEPA) தலைவி, தனது சட்டரீதியான பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதாலும், X-Press Pearl சம்பவத்திற்கு திறம்பட பதிலளிக்கத் தவறியதாலும், அரசியலமைப்பின் பிரிவு 12(1) ஐ மீறியுள்ளார்.
- MV X-Press Pearl கப்பலின் உரிமையாளர் மற்றும் ஆபரேட்டர்கள் மீது, கடல்சார் சுற்றாடல் மாசடைதல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26(a) இன் கீழ் வழக்குத் தொடரத் தவறியதன் மூலம் சட்டமா அதிபர் அரசியலமைப்பின் பிரிவு 12(1) ஐ மீறியுள்ளார்.
- சட்டமா அதிபர், கடற்படை அதிகார வரம்பைப் பயன்படுத்தி இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்குப் பதிலாக, நியாயமற்ற முறையிலும், தன்னிச்சையாகவும் சிங்கப்பூரில் சிவில் வழக்கொன்றைத் தாக்கல் செய்ததன் மூலம் 12(1) ஆம் உறுப்புரையை மீறியுள்ளார். இந்த முடிவு தேசிய நலனுக்கு உகந்ததல்ல எனவும் கருதப்பட்டது.
பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவுகள்:
- X-Press Pearl குழுமம், ஒரு வருடத்திற்குள் ஆரம்பகட்ட நட்டஈடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்குச் செலுத்த வேண்டும். அதன் முதல் தவணை 2025 செப்டெம்பர் 23 ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டும். மேலதிக நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் நீதிமன்றத்தால் உத்தரவிடப்படலாம்.
- உள்நாட்டு முகவரான சீ கன்சோர்டியம் லங்கா (பிரைவெட்) லிமிடெட் (Sea Consortium Lanka (Pvt.) Ltd) நிறுவனமானது, 2021 ஜூன் 2 ஆம் திகதி நிலவரப்படி X-Press Pearl தொடர்பான விடயங்களில் ஈடுபட்டிருந்த அனைத்துப் பணிப்பாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு சத்தியக்கடதாசியைத் தாக்கல் செய்ய வேண்டும்.
- இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம், இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து ஒரு புதிய விசாரணையை நடத்த வேண்டும். அத்துடன், புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, ஏனையவற்றுடன், இந்தப் பேரழிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் குறித்தும் ஆராய வேண்டும்
- நட்டஈடுகளை மேற்பார்வை செய்வதற்காக நீதிமன்றம் ஒரு நட்டஈட்டு ஆணைக்குழுவை நிறுவியது.
- சுற்றுச்சூழல் மீட்பிற்காக, கடல் மற்றும் கடலோர பகுதிகளை மீட்டெடுக்கும் நோக்கில் ‘கடல் மற்றும் கரையோர புனரமைப்பு குழுவை’ நீதிமன்றம் நிறுவியது.
- சட்டமா அதிபர் விசாரணைகளை நிறைவு செய்து, வழக்குத் தொடர வேண்டும். மேலும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், இலங்கையின் கடல்சார் சுற்றாடல் மாசடைதல் தொடர்பான சட்டங்கள் சர்வதேச தரங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் வகையில் சட்டச் சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும்.
இலங்கை வரலாற்றின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றான X-Press Pearl அனர்த்தத்தில் தங்கள் பங்குகளுக்காக அரச அதிகாரிகள் மற்றும் பெருநிறுவன செயற்பாட்டாளர்கள் இருதரப்பையும் பொறுப்புக்கூறச் செய்த உயர் நீதிமன்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை TISL வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பானது, எதிர்காலத்தில் சுற்றாடல் பாதிப்புகள், ஆட்சிமுறைத் தோல்விகள் மற்றும் ஊழல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு, வெளிப்படைத்தன்மை, நிறுவன மற்றும் பெருநிறுவனப் பொறுப்புக்கூறல், மற்றும் சட்டக் கடமைகளின் வலுவான அமுலாக்கம் ஆகியவற்றின் முக்கியத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த வழக்கு, கௌரவ பிரதம நீதியரசர் முர்து என்.பி. பெர்னாண்டோ, ஜனாதிபதி சட்டத்தரணி, கௌரவ யசந்த கொடகொட, ஜனாதிபதி சட்டத்தரணி, கௌரவ ஏ. எல். ஷிரான் குணரத்ன, கௌரவ அசல வெங்கப்புலி, மற்றும் கௌரவ கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஐந்து நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணி Ms. துஷாரி ஜயவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட சட்டத்தரணி Mr. சேனானி தயாரத்ன அவர்களுடன், Ms. நிஷாதி விக்ரமசிங்க, Ms. மகேஷிகா பண்டார, Mr. ஆதித்ய கரல்லிஅத்த மற்றும் Ms. ஜனனி அபேவிக்ரம ஆகியோர் TISL சார்பில் முன்னிலையாகினர்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் ஒளியூட்ட TISL தன்னுடைய அர்ப்பணிப்பில் திடமாய் நிற்கின்றது. மேலும், உயர் நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முக்கியமான தீர்ப்பை நடைமுறைப்படுத்தப்படுவதற்காக TISL தொடர்ந்து செயற்பாட்டுடன் பங்காற்றுவதாகவும் உறுதியளிக்கிறது.
முழுமையான தீர்ப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது: https://supremecourt.lk/?melsta_doc_download=1&doc_id=3b6f6e7b-53d9-4c75-8428-e27159491296&filename=sc_fr_168_176_184_277_2021.pdf