Skip links

Transparency International Sri Lanka (TISL) expresses deep concern over the inertia in appointing the Chairperson of the Right to Information RTI Commission.

As of July 9, 2025, Sri Lanka’s Right to Information (RTI) Commission remains without a duly appointed Chairperson. The seat has been vacant since the resignation of retired Supreme Court Justice Upaly Abeyrathne in March 2025. The undue delay in the appointment, despite calls by concerned stakeholders, including civil society and media, to expedite the appointment process in view of the significant role played by the Chairperson in ensuring the effective operation of the Commission and safeguarding people’s right to information, raises legitimate concerns.

The RTI Act mandates that the Commission consists of five Commissioners to function at its optimum efficiency, representing a rich diversity and expertise in opinion. It is, therefore, imperative that the Commission have its full membership, including the significant role played by the Chairperson. The Commission is arguably one of the most important independent public institutions in the anti-corruption eco-system with extensive powers and duties including the hearing matters on appeal, investigating and prosecuting alleged offences, issuing guidelines on record management and proactive disclosure, monitoring the implementation of the law and making recommendations for reform, and committed to awareness-raising.

At present, the Commission consists of Attorney-at-Law Kishali Pinto-Jayawardena, Attorney-at-Law Jagath Liyanarachchi, A.M. Nahiya and retired Appeal Court Justice D.N. Samarakoon, the newly appointed Commissioner as of May 2025, bringing the Commission up to four out of five members.

While the reasons for the delay are publicly unknown, in the event the Chairperson is to be the remaining appointee to the Commission, TISL urges the Constitutional Council to ensure as mandated by Section 12(2) of the Act in making its recommendations to the President, that persons who have inter alia, distinguished themselves in public life is recommended. It is imperative that, keeping with the spirit of the law, individuals with recognition and respect through their actions, contributions or service, in roles that are visible and impactful to the broader society are recommended by the Constitutional Council.

TISL notes with concern that the perceived prevailing pattern in recent government appointments spanning across ministerial, administrative and state-owned enterprise positions reflects a mix of political loyalty, allyship and external interests, which often come at the expense of meritocracy, transparency and public trust. These seeming conflicts of interest trends highlight the need for robust conflict-of-interest safeguards and a reinforced commitment to good governance practices. Such patterns could erode public trust in the government’s ability to deliver promises of integrity and accountability. Thus, when recommending a distinguished individual for the RTI Commission, especially the position of Chairperson, actions and services in the public interest, integrity, transparency, and justice are of utmost importance.

The RTI Commission’s ability to effectively perform its mandate and operate smoothly is significantly compromised in the absence of a Chairperson. The continued functioning of the Commission is an essential safeguard for the constitutionally guaranteed right to information of the people.

TISL calls on the President and the Constitutional Council to expedite the appointment of the Chairperson to the Commission without further delay, showcasing a genuine commitment to anti-corruption in Sri Lanka. Importantly, ensuring that the appointee is an individual distinguished themselves in public life, possessing proven knowledge, experience, and unquestionable eminence in the relevant fields, as mandated by the RTI Act. Compromising the calibre and integrity of this appointment could lead to serious implications for the meaningful implementation of the RTI law.

තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම පිළිබඳ කොමිෂන් සභාවේ (RTI කොමිෂන් සභාව) සභාපති පත්කිරීමේ ප්‍රමාදය පිළිබඳ ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) දැඩි අප්‍රසාදය

2025 ජූලි 9 වන දින වන විටත්, ශ්‍රී ලංකාවේ තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම පිළිබඳ කොමිෂන් සභාවට නිසි පරිදි පත් කරන ලද සභාපතිවරයෙක් නොමැත. විශ්‍රාමික ශ්‍රේෂ්ඨාධිකරණ විනිසුරු උපාලි අබේරත්න මහතා 2025 මාර්තු මාසයේදී ඉල්ලා අස්වීමෙන් පසු එම ධූරය පුරප්පාඩු වී ඇත.

කොමිෂන් සභාවේ කාර්යක්ෂම ක්‍රියාකාරීත්වය සහ ජනතාවගේ තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම සුරැකීම සඳහා සභාපතිවරයා විසින් ඉටු කරනු ලබන වැදගත් කාර්යභාරය සැලකිල්ලට ගෙන, සිවිල් සමාජය සහ මාධ්‍ය ඇතුළු අදාළ පාර්ශ්වකරුවන් විසින් පත්කිරීමේ ක්‍රියාවලිය කඩිනම් කරන ලෙස ඉල්ලා සිටියද, සභාපති පත්කිරීමේ අනවශ්‍ය ප්‍රමාද වීම ගැටලුකාරී තත්වයක් මතු කරයි.

තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම් පනත මගින් නියම කර ඇත්තේ විවිධත්වය සහ විශේෂඥ දැනුම නියෝජනය කරමින් උපරිම කාර්යක්ෂමතාවයෙන් කටයුතු කිරීමට කොමිෂන් සභාව සාමාජිකයින් පස් දෙනෙකුගෙන් සමන්විත විය යුතු බවයි.  එබැවින්, සභාපතිවරයාගේ වැදගත් භූමිකාව ද ඇතුළුව, කොමිෂන් සභාවට සම්පූර්ණ සාමාජිකත්වය තිබීම අත්‍යවශ්‍ය වේ. RTI කොමිෂන් සභාව දූෂණ විරෝධී පද්ධතියේ ඇති වැදගත්ම ස්වාධීන මහජන ආයතනවලින් එකක් වන අතර, අභියාචනා පිළිබඳව කරුණු විභාග කිරීම, වැරදි විමර්ශනය සහ නඩු පැවරීම, වාර්තා කළමනාකරණය සහ ප්‍රගාමී හෙළිදරව් කිරීම පිළිබඳ මාර්ගෝපදේශ නිකුත් කිරීම, නීතිය ක්‍රියාත්මක කිරීම අධීක්ෂණය සහ ප්‍රතිසංස්කරණ සඳහා නිර්දේශ ඉදිරිපත් කිරීම, සහ දැනුම්වත් කිරීමේ කටයුතු සිදු කිරීම ඇතුළු පුළුල් බලතල සහ වගකීම් කොමිෂන් සභාව සතුය.

වර්තමාන RTI කොමිෂන් සභාව, නීතිඥ කිෂාලි පින්ටෝ-ජයවර්ධන, නීතිඥ ජගත් ලියනආරච්චි, ඒ. එම්. නහියා සහ 2025 මැයි මාසයේදී අලුතින් පත් කරන ලද අභියාචනාධිකරණ විශ්‍රාමික විනිසුරු ඩී. එන්. සමරකොන් යන අයගෙන් සමන්විත වේ. මේ අනුව, සාමාජිකයින් පස් දෙනෙකුගෙන් සිව් දෙනෙකු මේ වන විට පත් කර ඇත.

වත්මන් ප්‍රමාදයට හේතු මහජනයාට ප්‍රසිද්ධ නොවන අතර, සභාපතිවරයා වශයෙන් පත් කෙරෙන්නේ කොමිෂන් සභාවට පත් කිරීමට නියමිත පස්වන සාමාජිකයා වන්නේ නම්, ව්‍යවස්ථාදායක සභාව විසින් ජනාධිපතිවරයාට නිර්දේශ ඉදිරිපත් කිරීමේදී පනතේ 12(2) වගන්තිය ප්‍රකාරව, අනෙකුත් කරුණු අතර, පොදු ජීවිතයේ කැපී පෙනෙන විශිෂ්ට අයුරින් කටයුතු කළ පුද්ගලයන් නිර්දේශ කිරීමට කටයුතු කරන TISL සංවිධානය ඉල්ලා සිටී. නීතියේ පරමාර්ථයට අනුගත වන පරිදි, තම ක්‍රියාවන්, දායකත්වයන් හෝ සේවය තුළින් පුළුල් සමාජය තුළ පිළිගැනීමට ලක්  වූ සහ ගෞරවය දිනාගත් බවට පැහැදිලිව පෙනෙන සහ සමාජ කාර්යභාරයන් ඉටු කළ පුද්ගලයන් ව්‍යවස්ථාදායක සභාව විසින් නිර්දේශ කිරීම අත්‍යවශ්‍ය වේ.

මෑත කාලීන රජයේ අමාත්‍යංශ, පරිපාලන සහ රජය සතු ව්‍යවසායන් වලට කල පත්කිරීම් වල දේශපාලන පක්ෂපාතිත්වය, මිත්‍රත්වය සහ බාහිර අභිලාෂයන් මිශ්‍රණයක ප්‍රවණතා රටාවක් පිළිබිඹු කරන අතර, බොහෝ විට මෙයින් සුදුසුකම් මත පදනම් වූ පත්කිරීම්,  විනිවිදභාවය සහ මහජන විශ්වාසය යටපත් කරන බවත්, එවැනි බැඳියාවන් අතර ගැටුම් ප්‍රවණතා වලින් පිළිබිඹු වන්නේ, එම බැඳියා ගැටුම් වැලැක්වීමට ශක්තිමත් ආරක්ෂණ සහ යහපාලන සඳහා කැපවීම තහවුරු  කිරීම අත්‍යාවශ්‍ය බව TISL සංවිධානය අවධාරණය කරයි. එවැනි ප්‍රවණතා තුලින්, වගවීම සහ සුපිලිපන්භාවය පිළිබද රජයේ පොරොන්දු ඉටු කිරීමේ හැකියාව පිළිබඳ මහජන විශ්වාසය පළුදු වේ. ඒ අනුව, තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම් කොමිෂන් සභාවට, විශේෂයෙන්ම සභාපති තනතුරට සුදුසු පුද්ගලයෙකු නිර්දේශ කිරීමේදී, මහජන සුභසිද්ධිය, සුපිලිපන්භාවය, විනිවිදභාවය සහ යුක්තිගරුක වීම යන ගුණාංග ඇති බවට සහතික කිරීම අතිශයින් වැදගත් වේ.

සභාපතිවරයෙකු නොමැතිව තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම් කොමිෂන් සභාවේ ධූරාවලිය ඵලදායී ලෙස සහ බාධාවකින් තොරව ඉටු කිරීමට ඇති හැකියාව සැලකිය යුතු ලෙස අඩාල වේ. කොමිෂන් සභාවේ අඛණ්ඩ ක්‍රියාකාරීත්වය ජනතාවගේ ව්‍යවස්ථානුකූලව සහතික කරන ලද තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම ආරක්ෂා කිරීම සඳහා අත්‍යාවශ්‍යය වේ.

තවදුරටත් ප්‍රමාදයකින් තොරව කොමිෂන් සභාවේ සභාපතිවරයා පත් කිරීම කඩිනම් කිරීම තුලින් ශ්‍රී ලංකාවේ දූෂණ විරෝධී වැඩසටහනට සැබෑ කැපවීමක් ප්‍රදර්ශනය කරන ලෙස TISL සංවිධානය ජනාධිපතිවරයා සහ ව්‍යවස්ථාදායක සභාවෙන් ඉල්ලා සිටියි. එම පත්කිරීම තුලින් තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම් පනත ප්‍රකාරව, පොදු ජීවිතයේ කැපී පෙනෙන විශිෂ්ට අයුරින් කටයුතු කළ, ඔප්පු කරන ලද දැනුමක්, අත්දැකීම් සහ අදාළ ක්ෂේත්‍රවල නොසැලෙන කීර්තියක් ඇති පුද්ගලයෙකු පත් කිරීම සහතික කළ යුතුය. මෙම පත්කිරීමේ ගුණාත්මකභාවය සහ සුපිලිපන්භාවය මගින් තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම් නීතිය අර්ථවත් ලෙස ක්‍රියාත්මක කිරීම කෙරෙහි බරපතල බලපෑම් ඇති කළ හැකි බව TISL සංවිධානය අවධාරණය කරයි.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைமைப் பதவி வெற்றிடம் குறித்து ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின்  (RTI) தலைவரை நியமிப்பதில் நிலவும் காலதாமதம் குறித்து  ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 2025 ஜூலை 9ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு இன்னும் முறையாகத் தலைவர் நியமிக்கப்படவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபயரத்ன மார்ச் 2025 இல் பதவி விலகியதிலிருந்து இந்தப் பதவி வெற்றிடமாகவே உள்ளது. ஆணைக்குழுவின் செயற்பாட்டிலும், மக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாப்பதிலும் தலைவரின் பங்கு மிக முக்கியமானது என்பதால், இந்த நியமனத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இருந்தபோதிலும், நியமனத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேவையற்ற தாமதம் நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது உகந்த வினைத்திறனுடன் செயற்படவும், பல்வேறுபட்ட கருத்துக்களையும் நிபுணத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஐந்து ஆணையாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என  தகவலறியும் உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. எனவே, தலைவர் உட்பட முழுமையான உறுப்பினர்களைக் கொண்டிருப்பது ஆணைக்குழுவுக்கு அத்தியாவசியமானது. மேன்முறையீடுகளை விசாரித்தல், குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து வழக்குத் தொடர்தல், ஆவண முகாமைத்துவம் மற்றும் முன்கூட்டிய தகவல்களை வெளியிடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குதல், சட்ட அமுலாக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விரிவான அதிகாரங்களையும் கடமைகளையும் கொண்ட ஊழல் எதிர்ப்பு சூழலியலில் மிக முக்கியமான சுயாதீன பொது நிறுவனங்களில் ஒன்றாக இந்த ஆணைக்குழு திகழ்கிறது.

தற்போது, ஆணைக்குழுவில் சட்டத்தரணி கிஷாலி பிண்டோ-ஜயவர்தன, சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, ஏ.எம். நஹியா மற்றும் 2025 மே மாதம் புதிதாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் டி.என். சமரகோன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இதன் மூலம் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் நால்வர் பதவியில் உள்ளனர்.

இந்தத் தாமதத்திற்கான காரணங்கள் பொதுவெளியில் அறியப்படாத அதே வேலை, ஆணைக்குழுவிற்கு மீதமுள்ள நியமனமாக தலைவர் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், சட்டத்தின் 12(2) ஆம் பிரிவின்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளவாறு, ஜனாதிபதிக்கு தனது பரிந்துரைகளைச் செய்யும்போது, ஏனைய தகைமைகளுடன், பொது வாழ்வில் தம்மை தனித்துவப்படுத்திக் காட்டிய நபர்களைப் பரிந்துரைக்குமாறு அரசியலமைப்புப் பேரவையை TISL வலியுறுத்துகிறது. சட்டத்தின் நோக்கத்திற்கேற்ப, பரந்த சமூகத்தில் அவர்களின் செயல்கள், பங்களிப்புகள் அல்லது சேவை மூலம் அங்கீகாரமும் மரியாதையும் பெற்ற தனிநபர்கள் அரசியலமைப்பு பேரவையால் பரிந்துரைக்கப்படுவது அத்தியாவசியம்.

TISL நிறுவனமானது, அமைச்சுசார், நிர்வாகம்சார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் அண்மையில் இடம்பெற்ற நியமனங்கள் தொடர்பில் கவலை தெரிவிக்கிறது.  இந்நியமனங்களில் நிலவும் ஒரு போக்காகக் கருதப்படும் விடயங்களானது, அரசியல் விசுவாசம், கூட்டுறவு மற்றும் வெளிப்புற நலன்களின் கலவையைப் பிரதிபலிப்பதாக தெரிகிறது. இது பெரும்பாலும் தகுதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை விலையாகக் கொடுத்து இடம்பெறுகிறது.

இந்த வெளித்தோற்றத்திலான நலன் முரண்பாட்டுப் போக்குகள், வலுவான நலன் முரண்பாட்டுப் பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கான மீளவலியுறுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய போக்குகள், ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் பொதுமக்களின் நம்பிக்கையை அரிக்கக்கூடும். எனவே, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு, குறிப்பாகத் தலைவர் பதவிக்கு ஒரு புகழ்பெற்ற தனிநபரைப் பரிந்துரைக்கும் போது, பொது நலனில் ஆற்றிய சேவைகள், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதி ஆகியவற்றுக்கான அவரது செயல்களும் சேவைகளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தலைவர் இல்லாத நிலையில், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது கடமைகளைத் திறம்படச் செய்யவும், சுமூகமாகச் செயற்படவும், தடையின்றி இயங்குவதற்கும் உள்ள திறன் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது. ஆணைக்குழுவின் தொடர்ச்சியான செயல்பாடு, அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் தகவலறியும் உரிமைக்கான ஒரு அத்தியாவசியமான பாதுகாப்பாகும்.

எனவே, TISL நிறுவனமானது, ஜனாதிபதியையும் அரசியலமைப்புப் பேரவையையும், இலங்கையில் ஊழல் எதிர்ப்புக்கான உண்மையான அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில், மேலும் தாமதமின்றி ஆணைக்குழுவின் தலைவரை நியமிக்குமாறு கோருகிறது. முக்கியமாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளபடி, நியமிக்கப்படுபவர் பொது வாழ்வில் தம்மை தனித்துவப்படுத்திக் காட்டிய, நிரூபிக்கப்பட்ட அறிவு, அனுபவம் மற்றும் தொடர்புடைய துறைகளில் கேள்விக்கிடமற்ற மேன்மையைக் கொண்ட ஒரு தனிநபராக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். இந்த நியமனத்தின் தரம் மற்றும் நேர்மையில் சமரசம் செய்துகொள்வது, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் அர்த்தமுள்ள அமுலாக்கத்தில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

 

This website uses cookies to improve your web experience.